பக்கம்:தயா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ಘೀಃfಕ್ இந்த வயஸ் லே. இந்த உடம்பில்ே அம்மா, உனக்கு இந்த நாக்கு துேண்டாம், உனக்குத்தான் வாழைக்காய் பிடிக்குமே!’ ச. அதுக்காக?”

ஜயா, அம்மா சொல்றதும் நியாயந்தான். மூஞ்சிலே அடிச்ச மாதிரி, வந்ததிலிருந்து இதென்ன ஒயாமே வாழைக் காயை வெந்த கறி, வதக்கின கறி, துருவல் கறி, ஸாம்பாரில் வாழைக்காய்த்தான்...?”

கூட்டிலே கூடன்னா வாழைக்காய்?" வசனமே உண்டு : வாழைக்காய்க்கூட்டும் வளர்த் தேடுத்த பிள்ளையும்' 'அதான் எடுத்தாச்சு வளர்த்தாச்சு கொடுத்தாச்சே!” 'இதென்ன புதுப் பிரலாபம்?" . "இந்த நாளிலே பிள்ளையை வாங்கறதேது? பிள்ளையைக் கொடுக்கறதுதானே உண்டு' "நம்ம பிள்ளை நல்ல பிள்ளையம்மா." 'அரசப் பிரதட்சிணம் பண்ணி இடதுகையாலே சாப்பிட்டு...' "கோவில் படியை நெய்யாலே மெழுகி, பிள்ளைப் பூச்சி முழுங்கி-’ "தவங்கிடந்து ராமேசுவரம் போய்’ 'உச்சிப் பிள்ளையாருக்குத் தினம் ஒரு குடம் காவேரியிலிருந்து ஈரப்புடைவையோடு ஜலம் எடுத்து வந்து -” "ஆசையாச் சுமந்து அருமையாப் பெற்றபிள்ளை. எங்கேயோ படித்துறையில் கண்டெடுத்து வளர்த்த பிள்ளையல்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/12&oldid=886233" இலிருந்து மீள்விக்கப்பட்டது