பக்கம்:தயா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி பள்ளியிலிருந்து ஜிங்லி வீட்டுக்குத் திரும்பி வந்து கொன் டிருந்தான். அவன் நடைக்கேற்ப தோளில் புத்தகப் பை, கடியாரத்தின் பெண்டுலம்போல் ஆடியது. அவன் வந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆள் நடமாட்டம் கிடையாது. அதுவும் இந்த ரயில் தண்டவாளம் தாண்டற இடம் வரதே. சரியான பொட்டல் காடு, யாராவது அடிச்சுப் போட்டால் கேட்க ஒரு ஆள்-கண்டேன்’னு கத்த ஒரு காக்காகூட கிடையாது. அந்த மாதிரி ஏதாவது நேர்ந்துட்டால் 'நீ ஏன் அங்கே தனியா போனே?'ன்னு கேட்டு அடிக்கத்தான் பெரிய வாளுக்குத் தெரியும், "ஐயோ, பட்டது. பல்லா, கல்லா?” ன்னு பதைக்கறது. அப்புறம்தான். ஆனால் ஜிங்லிக்கு-(pங்லிக் கண்ணாட்டான்-கண் னாட்டிக்கு ஆண்பால்!) இந்த இடம் எல்லாம் தண்ணி பட்ட பாடம், கர்ர்ர் வானம் போன்ற அவன் ஒட்டத்துக்கு முன்னால் எவனாவது நிற்க முடியுமா? ஜிங்லிக்குப் பாட்டி இட்டபேர் சிட்டிக் குருவி'ன்னா! ஆனால் அந்த வேப்ப மரத் தண்டை-அரசமரம்னு இன்னொருத்தர் சொல்றா. இரண் டுக்கும் வித்தியாசம் என்னன்னு அவனுக்குக் தெரியாது. ஆனால் அது முக்யமில்லே-அந்த மரத்தண்டை வரபோது மாத்ரம் மார் தவறாமல் 'பட்பட்’னு ரெண்டு அடி-காதுக்கு நன்னா கேக்கற மாதிரி-அடிச்சுக்கும். ஏன்னா, அதிலே மூணு வருஷத்துக்கு முன்னாலே-அப்பாவுக்கு இந்த ஸ்டேஷ னுக்கு மாத்தல் ஆறதுக்கு முன்னாலேயே-ஒரு ஆள் தொங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/121&oldid=886236" இலிருந்து மீள்விக்கப்பட்டது