பக்கம்:தயா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$20 தயா எங்களுக்கில்லே. என் பையனை நீ தொடாதே’ன்னு சொல்லிட்டேன், "சரிம்மா. பேசிட்டே இருந்துட்டேன். பொளுது சாஞ்சு போச்சு. ரெண்டு வெத்திலை இருந்தாக் குடேன். தொண்டை காஞ்சு போச்சு. எனக்கு நல்ல வெத்திலேயா வேணாம். கட்டைப் புகையிலைக்குக் காஞ்ச வெத்திலை பத்தாதா? துளிர் வெத்திலையை நீயே போட்டுக்க, குளி குளிச்சிருக்கே, பாவம் அந்தக் கொடிக்கால்காரனை வளியிலே கண்டா இங்கே தெனம் ஒரு கவுளி கொண்டாந்து போடச் சொல்லவா, இல்லே, நானே வாங்கி வந்துடவா? வவுத்தை இழுத்துக் கட்டும்மா; இல்லாட்டி தொப்பை வுளுந்துடும்: இந்தத் தடவையும் பொண்ணைப் பெத்துக்கிட்டே, போ. அப்போ நம்ம ஜிங்லிப் பையன்தான் செல்லமவன். மூணு பொண்ணுக்கு நடுவுலே ஒரு ஆம்புள்ளே. ஜிங்லி அதிர்ஸ்டக் காரப் பையன், நான் அன்னிக்கே சொன்னேனே-ஒனக்கும் ஆயாளுக்கும் கையாலே ஆவல்லேன்னு அவனுக்குத் தலைக்குத் தண்ணி போட்டேனே. அன்னிக்கே கண்டு சொன்னேன்! பையனுக்கு மச்சம் எங்கே இருக்குது, பார்த்தியா? 'இதென்னடியம்மா, உள்ளதை சொன்னா ஒனக்கு ஏன் இப்படி மொவம் செவக்குது? ஆனா நான் அதியப் பிரசங்கி தான்; ஒப்புக்கறேன். புள்ளை ஒடம்புலே இருக்குது பெத்தவளுக்குத் தெரியாமே மத்தவங்க என்னைத்தைக் கண்டுசொல்ல முடியும்? ஆனா என் மேலே தப்பா எதுவும் எண்ணம் வெக்காதே, அம்மா. நான் கள்ளங் கவடு அத்தவ. என் வாய்க்கு வந்ததை என்னவோ குறி சொல்றாப்போல சொல்லிட்டே போறேன். "உன் புள்ளையும் என் புள்ளையும் எப்பிடி ஒத்துமையா இருக்காங்க, பார்த்தியாம்மா? உன் மவன், புத்தகம் சிலேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/126&oldid=886241" இலிருந்து மீள்விக்கப்பட்டது