பக்கம்:தயா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி 121 பையிலே தொங்க விட்டுக்கிட்டு என் குடிசைக்கெதிரே நின்னுக்கிட்டு கடம்பாடி!'ன்னு கொரல் குடுக்கிறபோது: என் பையன் அந்த நேரம் எந்த முருங்கை மரத்திலே ஏறிக் கிட்டு இருக்குதோ, எனக்கு எம்மாம் சந்தோசமா இருக்குது தெரியுமா? ஒனக்குத் தெரியாது; நீ பொய்னா பொய், மெய்னா மெய், வெச்சுக்க எனக்குக் காது குளுகுளுங்குது, ரெண்டு பேரும் சேர்ந்தாப்போலே பள்ளிக்கூடம் போவச்சே எட்ட எட்டப் போற அந்த ரெண்டு முதுவையும் சுத்தி நெத்தியிலே கையை முறிச்சா திஸ்டி எப்படிக் களியுது தெரியுமா? இந்த பாப்பார சாதிதான் படிச்ச சாதி. இது தான் எதிலேயும் நம்பிக்கையில்லாத சாதி, அசப்பிலே அவுங்களைப் பார்த்தா ரெட்டைன்னு சொல்லுவாங்க அதுக்கென்ன, என் புள்ளை நிறம் கொஞ்சம் மட்டு, உன் புள்ளை திரேகம் கொஞ்சம் இளைப்பாக் காட்டுதுபச்சையும் புளுங்கலும் கலந்தாப்போல, அவ்வளவுதானே! போன வாரம் பளம் டாயரும் சொக்காயும் நீ குடுத்தியே, கடம்பாடிக்கு என்ன அச்சா இருக்குது தெரியுமா, அவனுக்கே தைச்சாப்போலே! களுத்துலேதான் புடிப்பாயிருக்குது. இதுக்குன்னு இருந்தா அது கூட இருக்காதா என்ன-என் வவுத்துலே என் புள்ளே, உன் வவுத்துலே உன் புள்ளேன்னு பொறந்தா? கடவுளோட எண்ணம் இல்லாட்டி ஒலகத்துலே எல்லாரும் ஒரு வவுத்துலே பொறந்திருக்க மாட்டாங்களா! ஆனா நான் கடம்பாடிக்கு தைரியம் சொல்லியிருக்குறேன். "இரு இரு அய்யர் ஆட்டுப் பொண்ணுக்குக் கண்ணாலம்ஆனை மேலே, குதிரை மேலே, ஸrரட்டு வண்டி மேலே - அவசரமா வந்துட்டேயிருக்குது. ஒனக்கு டாயர். சொக்கா, எனக்குப் புடவை புதுஸ்ஸாவே எடுப்பாங்கன்னு என் புள்ளைக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்தறது, நான் சொல்லிட்டேன், உன் பாடு. எங்களுக்கு வார்த்தைதான் பெரிசு. நாங்க பொய் சொல்லுவோம், குடிப்போம், காவலிலே இருந்துட்டு வந்துடுவோம், எங்க சாதிக்கு அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/127&oldid=886242" இலிருந்து மீள்விக்கப்பட்டது