பக்கம்:தயா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜில்லி 123 டேஸன் மாஸ்டரா வந்துட்டா, அவர்கிட்ட கடம்பாடி வேலைக்கு அமந்துட்டா-அட, வர ரயிலுக்கு கொடி காட்டவும், வந்த ரயிலை 'போ'ன்னு அந்தத் தண்ட பாளத்தைத் தொங்கவிட்டிருக்காங்களே, அதைத் தட்டவும் ஒரு ஆள் வேண்ாமா? அட, அதுவே வேணாம், ஐயா வேட்டியைத் தோச்சுப் போடவும், பசங்களுக்கு வேடிக்கை காட்டவும், டேஸனுக்கும் ஆட்டுக்கும் பாதையிலே புல் செதுக்கவுமாவது ஆள் வேணாமா?-அப்போ அது எவ்வளவு நல்லாயிருக்கும்! என்னவோ வெள்ளி மொளைக்கறதுக்கு முன்னாலே நான் எளுந்து உன் வீட்டு வாசல்லே தண்ணி தெளிக்கக் கோலம் இளுத்த வேளை விணாப் போவல்லேன்னு அந்த நிம்மதியிலேயே கவலையில்லாமே கண்ணை மூடிடுவேன். அட, நான் நெனைச்சபடித்தான் நடக்குமோ நடக்காதோ, அந்த முத்தாலம்மைக்குத் தான் வெளிச்சம் நெனைச்சுட்டாவது இருக்கேனே, நெணைப்புக்கு யார்கிட்டே யாவது லசேன்ஸ் வாங்கியாவணுமா? நீ என்ன சொல்றே? எனக்குப் பேசிப் பேசித் தொண்டை காஞ்சே போச்சு நீ தலையைக்கூட ஆட்டாம கள்ளுக்கடை கருவேல் மரத்துப் புள்ளையாராட்டம் குந்திட்டிருக்கியே! நான் கேட்ட விசயம், காஞ்ச வெத்திலை, என்ன ஆச்சு?-- அந்த மரத்தண்டை வரும்போதெல்லாம் ஜிங்லிக்கு மார்பு பட் பட் ஓடிவந்தால் "படபட" பயந்தால் "படபட" கால் அந்த இடத்தைக் கடுகியும் கடக்கத் தவித்தாலும் கண்காணாத கைகள் ஆயிரம் மரத்தினின்று பிரிந்து வந்து நெஞ்சை இறுகத் தழுவி மனத்தை (நெஞ்சில் தான் மனம் என்று விதித்தவர் யாரோ?) தடுக்கும். ஒரு கணம்தான் ஆந்த அணைப்பு. அதிலும் பாதிதான் அவ்வணைப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/129&oldid=886244" இலிருந்து மீள்விக்கப்பட்டது