பக்கம்:தயா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி #27 "எப்டிடா அது, கடம்பாடி?” பதிலுக்குப் பதிலாக கற்சிலையின் புன்னகைபோல், கடம்பாடியின் வாயில் பூக்கும் ரகஸ்த்யம் என்னென்று கண்டவர் யார்? அவனைப்பற்றி ஒண்ணுமே புரிஞ்சுக்க முடியல்லே, ஒரு நாள் குட்ஸ்' போச்சு, 'கார்டுவானை'ச் சேர்க் காமல் இருவத்தியாறு பெட்டி, வண்டி ஸ்டேஷனை தாண்டிப் போறபோது ஊதித்து. இதுக்குன்னு ரயில்னு இருந்தால் "விசில்” அடிக்காதா என்ன? இல்லாட்டா அது என்னதான் ரயில்? ஒருதினுசா, முக்கி முனகிண்டு தொண்டையில் சதை அடைச்சுண்டு, பலஹlனமா, கூர்ப் பென்சிலால் கோடு கிழிச்ச மாதிரி.டாட்டி, தள்ளாமையில் ஊங்” கொட் டிண்டே தயிர் கடையறாளே அது மாதிரி (ஆனால் கூடவே, "நடக்கிறது நடக்கட்டும். நான் வெண்ணெய் எடுத்துப் பார்த்துடத்தான் போறே'ன்னு: பல்லைக் கடிக்கிறாளே, அதுதான் முழுக்கப் புரியல்லே. பாட்டிக்கு மோர் மேல் கோபமர், இல்லை. வேறு யார் மேல் கோபம்?) கடம்பாடிக்கு மூஞ்சி, நெருப்பில் காய்ச்சின அப்பளாம் மாதிரி வதங்கி, சவுங்கி, நசுங்சி, உதடு பிதுங்கிடுத்து. விசிச்சு, திடீரென விக்கி விக்கி அழறான். "என்னடா என் னடா?'ன்னு பத்துத்தடவை பதறிக் கேட்டும் மூஞ்சிதான், உப்பற்து. பதில் வரல்லே. ஜிங்லிக்கும் தொண்டை அடைக் கிறது, சிரங்கு, கொட்டாவி மாதிரி துக்கமும் ஒட்டுவா ரொட்டியா? ஆமா. சில சமயங்களில் எனக்கு என்னைப்பத்தி நினைச்சுக்கறபோது நான் இப்புடி செஞ்சேன், நான் ஆப்ப செஞ்சேன்னு எண்ணிக்கறதைவிட, 母

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/133&oldid=886249" இலிருந்து மீள்விக்கப்பட்டது