பக்கம்:தயா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தயா ஜிங்லி சிரிச்சான். ஜிங்லி காப்பியைக் கொட்டிட்டு பாட்டி கைக்கு அகப்படாமல் ஒடிப் போயிட்டான். சாயங்காலம் அப்பாகிட்ட ஜிங்லி சக்கை உதை வாங்கினான் இப்படி என்னைப் பத்தியே நானே வேத்தானாய். நினைச்சுப் பாக்கறதுலே ஏதோ ஒரு தமாஷ் இருக்கு, நெஞ்சிலே என்னவோ குறுகுறு பண்ணினாலும் அப்புறம் ரொம்ப நாழி கழிச்சு ஆயிரம் தேம்பலுக்கு நடுவே. 'அத்தினி பாரத்தை இழுக்கமாட்டாமே இழுத் துட்டுப் போவுதே, அந்த எஞ்சினுக்கு எவ்வளவு கஷ்-ஷ்உமா-ஆ-ஆயிருக்-க்கும் ஊ.ஊ!” ஆனால் அன்னிக்கு ஒருநாள், ஜிங்லியும் கடம்பாடி யும் கூடத்தில் விளையாடிண்டிருந்தபோது ஒரு பிள்ளைப் பூச்சி தத்திப் பறந்தது, கடம்பாடிக்கு திடீர்னு கோாம் வந்தது. அவனுக்கு மூஞ்சியே மாறிப்போச்சு, அதைக் காலாலேயே தேச்சுட்டான்- 'சொதக்’-ஐயே!-பாட்டி லபலபன்னு அடிச்சுக்கறா. 'அட கடம்பாடி கொடும்பாவிt முழியா.பழிகாரா! ஏற்கனவே உன் தாய்க்கு ஒரு பிள்ளையா வாய்ச்சிருக்கே, இன்னும் அவள் வயத்தெரிச்சலை என்ன கொட்டிருக்கக் காத்திண்டிருக்கேடா!' கடம்பாடி அசடு வழிய, மூஞ்சியைத் தொங்கப் போட்டுண்டு நிக்கறான். எனக்கு சிரிப்பா @珂盘。 இஞ்சின் குட்ஸை இழுக்கறதைத் தாளாத மனகலே பிள்ளைப் பூச்சியைக் கொன்ற கொடுரம் எப்படிக் குடி கொண்டிருக்கும்: டே ஜிங்லி, இங்கே வாயேன்!" கடம்பாடி தன் இரண்டு கைகளையும் முதுகின் பின்னால் மறைச்சு வெச்சுண்டிருக்கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/134&oldid=886250" இலிருந்து மீள்விக்கப்பட்டது