பக்கம்:தயா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்வி 1.2% "என்னத்துக்கு?’ 'வாயேன், உனக்கு ஒண்னு காண்பிக்கப் போறேன்.” கிட்ட வந்ததும் கடம்பாடியின் கைகள் முரட்டுத் தனமாய் ஜிங்லியின் வலது கைமேல் பாய்ந்தன, திடீரென கட்டை விரலில் கண்ட 'சுரீலி'ல் ஜிங்லி அலறி விட்டான். அது முள்ளா, ப்ளேடா, நெருப்புக் கொட்டையா? விரலின் உள் சதைக் குமிழில் சிவப்பு சட்டெனத் துளித்து உடனே பரவவும் ஆரம்பித்து விட்டது. மண்ணில் கூட ஒரு சொட்டு விழுந்து உறிஞ்சிப் போச்சு. உடனே கடம்பாடி குனிந்து அந்த விரலைப் பிடித்துத தன் வாயுள் வைத்துச் சப்பினான். அவன் வாயின் வெத் வெதப்பு வலிக்கு எவ்வளவு இதமாயிருக்கு! 'ஜிங்லி, உன் ரத்தம் என் உடம்பில் கலந்துட்டுது. இனிமேல் நீ எனக்குத் தம்பி, அண்ணனாயிருக்கணும்னு உனக்கு ஆசையிருந்தால் அப்படியே இருந்துக்க; எனக்கு அக்கறையில்லே. ஆனால், நம்ம ரத்தம் ஒண்னுக் கொண்ணு கலந்துட்டுது. இனிமேல் நாம ரெண்டு பேரும் ஒத்தருக் கொருத்தர் துரோகம் நினைக்கமுடியாது. இனி எத்தனை வருசமானாலும் சரி-நாம பிரிஞ்சு எங்கிருந்தாலும் சரிஉன் கஷ்டம் இனிமேல் என் கஷ்டம், எனக்கும் இனிமேல் அப்படித்தான். ஜிங்கி-ஜிங்லி. இதுக்கு நீ என்ன சொல்றே? ஏதாவது சொல்லேண்டா! நீ சொன்னாலும் சொல்லாட்டி யும் நம்ம ரத்தம் போனது சத்தியம்-ஆமான்னு சொல்லு! சொல்லு! சொல்றியா இல்லியா?" . "ஐயோ ஐயோ!' கடம்பாடிக் காண்டாமிருகம் கையைப் பிடிச்சி முறுக்கறது, பிராணனே போறது. ஆனால், அதைவிட அவன் சொன்னது தொண்டைக்குள் புகுந்து கொண்டு அடைக்கற لأج. وي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/135&oldid=886251" இலிருந்து மீள்விக்கப்பட்டது