பக்கம்:தயா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 :Eաո՝ அடைப்பு எனக்குப் பேச்சு வரமாட்டேன்கறது. என்னவோ அழுகையா வரது, ஆனந்தமாகவும் இருக்கு. ரெண்டும் ஒரே சமயத்தில் எப்படி இருக்க முடியும்னு திகைப்பாவும் இருக்கு, அந்த மரத்தண்டை நெருங்கும் போதெல்லாம் கடம் பாடியின் குரலில் ஒரு அடக்கம். கைகால் ஆட்டத்தில் கூடத் தணியாத ஒரு ஒடுக்கம், ஒரு சிரத்தை, ஒரு அச்சம். ஒரு ரகஸ்யமான பக்தி என்று கூடச்சொல்லலாம். முகத்தில் தனியாய். அதற்கு ஒவ்வாத ஒரு சூடிகை. முழுத் தோற்றத் திலேயே ஒரு “உஷ்.” ஜிங்லியை பக்தியான தூரத்தில் நிறுத்திவிட்டு. ஒரு முறை அந்த மரத்தை வளையவருவான். அதன் அடியில் ஒரு பாம்புப் புற்று இப்போதுதான் குழல் விட்டுக் கொண்டு உருவாகி வருகிறது, மரத்தடியில் இலைச் சருகுகளும், காற்றில் சுழன்று அடித்துக் கொண்டு வந்த வேறு குப்பை களும், ஜமக்காளம் விரித்தாற் போன்று நெருக்கமாய், அடர்ந்து உதிர்ந்திருக்கின்றன. "இதோ இங்கே இங்கேதான்- தடவைக்குத் தடவை அவன் சுட்டிக்காட்டும் இடம் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் அதைப் பற்றி இருவருக்குமே அக்கறை இல்லை. உடனே அண்ணாந்து பார்ப்பான். அதோ, அந்தக் கிளை தான், தேன் கூடு தெரியுது பாரு, அதான்-” "பாதம் கூட பூமியிலிருந்து முழுக்க. அலேக்கா’ தூக்கல்லே. ஆள் தொங்சினபடி கையைக் காலை உதைச்சுக் கிட்டப்போ, கால் கட்டை விரல் தரையைக் கீறின இடம் பள்ளமா எத்தினி நாளைக்கு அப்படியே இருந்திச்சு, தெரியுமா? அதை பார்த்துப் பார்த்து எனக்கே பயமாப் போய், நானே மண்ணை அள்ளிப் போட்டுட்டேன். ஜிங்லி, கழுத்து ஒடியறப்போ அந்த ஆளுக்கு எப்படித் துடிச் சிருக்கும்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/136&oldid=886252" இலிருந்து மீள்விக்கப்பட்டது