பக்கம்:தயா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி #31 ஜிங்லி தன் கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். 'திடீர்னு தொண்டையை வரட்டினாப்போல் இல்லை? நேரமாயிட்டாப் போல் இல்லை? நெஞ்சை வலிக்கறாப்போல இல்லை?” இருவரும் அவரவர் எண்ணங்களில் தம்மையிழந்து அந்த இடத்தைச் சிந்தித்தபடி நின்றனர். "கடம்பாடி நின்னபடியே தூங்கிட்டானா என்ன? ஒரேயடியாய் இருட்டிப் போயிடுத்தே! பாட்டி கவலையோடு வாசலில் காத்துண்டு நிப்பாள்’ 鹦 "என்னடா மஹாதேவா, உன் பிள்ளையைக் காணோமேடா! விளக்கு வெச்சுப் போச்சேடா!' "அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே? இந்தப் பொட்டல் காட்டில் விளக்கு வெக்கறவாளும் நாம்தான், அணைக்கறவாளும் நாம்தான். வேனுமானால் அந்த விளக்கை ஒரு அரைமணிநேரம் தள்ளி வெச்சுக்கோ உன் பேராண்டி வந்தப்புறம்!” தேடறதுக்கு முருகேசனை அனுப்பேண்டா' 'ஏன், அவனைப் பார்த்தால் உனக்கு வேட்டை நாயாத் தான் படறதா? :னுஷனாப் படல்லியா? ரெண்டு night சேர்ந்தாப்போல செஞ்சு பார்த்தால் தெரியும், அவன் கண் எப்படிக் கெஞ்சும்னு! நீ ஏம்மா கவலைப் படறே? அவனுக்கு ஒரு மெய்க்காவல்காரன் இருக்கானே அவனோடுதானே போயிருக்கான்? ஒருத்தனுக்கு ஏதாவது நேர்ந்தால் இன் னொருத்தன் வந்து சொல்ல மாட்டானா?” 'நான் ஏற்கெனவே வயத்திலே நெருப்பைக் கட்டிண்ருக் கேன். நீ ஏண்டா சுப வாக்கியம் சொல்றே?” என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? நீ உத்தரவு கொடு, இன்னிக்கே அவன் காலை இங்கே கிடக்கிற ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/137&oldid=886253" இலிருந்து மீள்விக்கப்பட்டது