பக்கம்:தயா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தயா ஒரு தண்டவாளத் துண்டாலே ஒடிச்சுடறேன். உனக்குப் பேரன் தக்குவான். நாள் பூரா நீ கண்ணெதிரே பார்த்துண்டு மகிழலாம்.” அம்மா, உள்ளே குழந்தையைத் துளியிலே ஆட்டிண்டே, :'நாள்பூரா அம்மாவும் பிள்ளையும் சேர்ந்துண்டு 'அவன் இதைப் பண்ணினான். அதைப் பண்ணினான்’னு ரெட்டை நாயனம் வாசிச்சிண்டு கரிக்கறத்துலே குறைச்சலில்லை, இப்போ குழந்தை மேல் அலாதியாப் பொத்துண்டு ஒழுகிற தாக்கும் எனக்கு வேண்டியே இல்லை!" ஆனால், அம்மா மொணமொணக்கறாள்னு பாட்டிக்கா தெரியாது? மனசிலிருக்கறதையே மோப்பம் பிடிச்சு ஏடு மாதிரிப் படிச்சுச் சொல்லிடுவாளே! இல்லாட்டா பாட்டி மூக்குக்கு எப்படி அத்தனை கூர்ப்பு வந்தது? பாட்டி உன் மூக்கு ஏன் அப்படி கத்தி மாதிரி இருக்கு? பேரன் கேள்வியினால் பாட்டிக்கு உள்ளுரச் சந்தோஷம், "ஓ அதுவா? அரவான் மாதிரி தீட்டி வெச்சிருக்கேண்டா! நான் சாகறத்துக் குள்ளே சில டேர் மூக்கையும் நாக்கையும் அறுக்கணும்னு காத்திண்டிருக்கேன்!” "நீ காத்துண்டு வேறே இருக்கையா என்ன, பாட்டி? அப்பப்போத்தான் பட்பட்’னு போட்டுண்டேயிருக்கையே!” அம்மா தலை சட்டுனு சமையலுள்ளிலிருந்து நீட்டறது, அப்பா 'நைஸ்ஸா!' நியூஸ் பேப்பரைத் தாழ்த்தி அதன் பின்னாலிருந்து திருட்டுப் பார்வை பார்க்கறார், எல்லோரும் பூனைக்கெதிரே எலி மாதிரி என்ன நேருமோ? ஆனால், அதென்னமோ வாஸ்தவம்தான், எல்லோ ருக்கும் பாட்டியைக் கண்டாலே அஸ்தியிலே கொஞ்சம் "ஐஸ்" தான். பிடரி மாதிரிப் புரளும் அந்த மஞ்சள் நரைக் கூந்தல் நடுவே, சிரிப்பில்லாத முகத்தில் ஜ்வலிக்கும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/138&oldid=886254" இலிருந்து மீள்விக்கப்பட்டது