பக்கம்:தயா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிங்லி #33 శ్రీ மஞ்சள் பூத்த கண்களை நிமிர்ந்து பார்த்துப் பேச யாருக்குமே கொஞ்சம் அச்சம்தான். பாட்டிக்கு அலாதியா ஒரு தோரணை உண்டு. அவள் எதிரே எப்படிப்பட்ட தைரிய சாலிக்கும் கையும் பிடியுமா அகப்பட்ட திருட்டுக் களை கொஞ்சமாவது சொட்டத்தான் சொட்டும். அதனால் ஜிங்லி, உனக்கு அசாத்தியத் துணிச்சல் தாண்டா நாங்கள் வளையில் பதுங்கிண்டிருக்கோம். நீ என்னடான்னா குஹைக்குள்ளேயே அனாயாசமாப் போய் வளையவரயே!'ன்னு அவா ப்ரமிக்கறா. பாட்டி ஒரு சிங்கம்தான். (ஆனால் ஆண் சிங்கத்துக்குத் தானே பிடரியுண்டு; பெண் சிங்கத்துக்கேது? இதென்ன குழப்பமோ தெரி பல்லியே!) "நீ சொல்றதும் சரிதான். களைக்கக் களைக்க வெட் டிண்டேயிருக்கும்.” இதுதான் பிடிக்க மாட்டேன்கறது, இந்தப் பெரியவாள் பாஷையில். பளிச்சுனு போயிண்டேயிருக்கற பேச்சில் திடீர்னு இருட்டடிப்பு. இவன் சிந்தனையைக் கலைத்து இருட்டைத் துளைத்துக் கொண்டு கடம்பாடியின் குரல் அவன்மேல் இறங்கியபோது, அந்த இடத்தில் தேங்கிவிட்ட நிசப்தம் சொட சொடத்தது. 'அந்த ஆள் யார், தெரியுமாடா' ஜிங்லி திகைத்தான். "எந்த ஆள்?" "அதுதான் இங்கே தூக்குப் போட்டுக் கிட்டு செத்துப் போன ஆள்!” - . 'எனக்கு எப்படித் தெரியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/139&oldid=886255" இலிருந்து மீள்விக்கப்பட்டது