பக்கம்:தயா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; தியா க்ரோட்டன்ஸில் பாச்சை, அந்தி இருளில் முகங்கள் கரைய ஆரம்பித்துவிட்டன. "ஆமாம்-ரொம்ப அழகா அல்பாணம் பண்ணி வெச்சியே'-ஸுபாவின் குரல். சிலந்தி நூல் போல், குரல் இருளினின்று, இழை பிரிந்து இருளுடே வந்து எட்டிற்று. 'ஏன், நான் பண்ண கலியாணத்துலே என்ன கோணலாம்? போறும் நிறுத்திக்கோ! நீயும் நீ பண்ணின உன் கல்யாண வைபவங்களும்- தன்னிடத்திலிருந்து ஜயா திடீரெனச் சீறினாள். அம்மா கூடக் கொஞ்சம் மிரண்டு போனாள். அவள் இடத்தில் இருளில் அவள் உருவம் சற்று உள்ளுக்கு இழுத்துக் கொண்டாற் போலிருந்தது. 'நீ தெருவையே அடைச்சுப் போட்ட பந்தலும் வேளைக்குப் பதினாறு பரிசாரகன் பரிமாறினதும் ஊஞ்ச லைப் பூவாலேயே இழைச்சதும் யாருக்கு வேண்டிக் கிடக்கு? - "ஊரே மகிமையாத்தான் பேசிண்டது.” "ஒண்ணுந் தெரியாத மாதிரி வேஷம் போடாதே அம்மா-' ஸ்பா பல்லைக் கடித்தாள். இப்போ எப்படி இருக்கோம்?” 'மூணும் மூணு தினுஸ்ாய். ஸுபாவாம், ஜயாவாம், தயாவாம்! நாமும் நம்ம பேரும்!” "உங்க அப்பா ஆசையா வெச்ச பேர்கள் டீ.!" "ஆமா. ஆசையா வெச்சளே அவலமாய் முடிய?’’ :: உஷ்? ஸுபா. சற்றே அடக்கிக்கோ. நம்மை "ாராவது கவனிக்கப் போறr-' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/14&oldid=886256" இலிருந்து மீள்விக்கப்பட்டது