பக்கம்:தயா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தியா 'அது எங்க அப்பாடா?’- கடம்பாடியின் குரல் தேம்பிற்று. தான் கண்ட அதிர்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்; இந்த மாதிரி சமயங்களில்தான் கடம்பாடி ஒரு புதிர்ப் பொட்டலம் ஆயிடறான்: (இங்கே திறக்காதே! வீட்டுக்குப் போய்த் - திறந்து பார், உள்ளே என்ன இருக்குன்னு களிமண்ணா, பப்பர்மின்டா நீயே கண்டுக்கோ லக்கி ப்ரைஸ், லக்இ ப்ரைஸ்!) இது, எவன் துக்கத்தையோ தன் துக்கமாக ஆக்கிக் கொள்வதில் அவனுக்கிருக்கும் அலாதி வரத்தில் சேர்த்தியா எஞ்சினுக்கு அழுதாற்போல்? (பாட்டுக்கு, படிப்புக்கு, நடிப்புக்கு, பரோபகாரத்துக்குன்னு பட்டம் வழங்கறாளே, அதுமாதிரி கடம்பாடிக்கு துக்க திலகம்னு பட்டம் சூட்டு வோமே?) இல்லை, ஏற்கெனவே லூஸ், பெளர்ணமீ, அமாவாசைன்னு பருவக் கோளாறாமோ, ஆதுவா? ரெண்டுமேயில்லாமல் நிஜம்மாவே இருந்துட்டாலோ ஜிங்லிக்கு மயிர்க்கூச் செறிந்தது. கடம்பாடி திடீரென ஒரு புது தரிசனமாகப் பிதுங்கினான். எல்லாப் பெரியவாளையும் போல், படுக்கையாப் படுத்து, நாளடைவில் நாறாய்த் தேய்ந்து. நாத்தமாயெடுத்து (பாட்டி படுக்கையை.அது அம்மாவைப் பெத்த பாட்டி; இந்தப் பாட்டிக்குத்தான் அழிவே இல்லையே! அந்தப் பாட்டி படுக்கையை சுட்டே யெரிச்சுட்டா) செத்ததே தேவலைன்னு இருக்கறவா மூச்சுவிடும் படியில்லாமல், 'பட்’னு துரக்கில் உயிர் போறதிவ், ஒரு தீராத ஆச்சரியம் இருக்கத்தான் இருக்கு, ஆப்படி ஏன் சாகனும்? தற்கொலையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/140&oldid=886257" இலிருந்து மீள்விக்கப்பட்டது