பக்கம்:தயா.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - தபோ டேய், வீட்டுக்குப் போகலாண் டா!' "நீ போ! நான் இன்னுங் கொஞ்ச நேரம் இருந்து என் அப்பனோடு பேசிட்டுத்தான் வரப்போறேன்!” கடம்பாடியைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமை, யாத்தானிருக்கு, நாள் ஆக ஆக அவனுக்குப் பெருமை" பெருகும், "இவன் யார் பிள்ளை, தெரியுமா?” 'அதான் தெரியாதா, அந்த மரத்திலே அன்னிக்குஒத்தன் தொங்கினானே, அவன் மகன். அவனுக்கென்ன குறைச்சல் அப்பனே பாம்பாயிருந்து மகனைக் காப்பாத்திட்டிருக்கான்." ஒஹ்ஹோ! இப்போ புரிஞ்சுது. அதனால்தான் கடம் பாடிக்கு விஷம் ஏறல்லியா? யார் கண்டது. ஒரு நாளைக்கு அவனுக்கு அவன் அப்பா புத்திலிருந்து மாணிக்கம் கிடைச்சாலும் கிடைக்கும். கடம்பாடி அதிர்ஷ்டசாலி, 3 ஆனால் இன்று மரத்தின் மந்திரக் கட்டிலிருந்து சுருக் கவே விடுபட்டாச்சு, அதையொட்டி விசன விஷயங்களில் மயங்கி, பிறகு மங்கி உழல, மனசில் மனம் இல்லை. மனம் இன்று குஷி, கடைசி பீரியட் வாத்தியார் வரவில்லை. பையன்களை முன்னாலேயே அவிழ்த்து விட்டாச்சு. ஜிங்லி தன்னைக் குதிரையாய் பாவித்துக் கொண்டு விட்டான்."க்ளொப் க்ளொப் க்ளொப்...” வாயில் குளம்புத் தாளம் போட்டுக் கொண்டு ஒரே நிதானத்தில் ஒடிக் கொண் டிருந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/142&oldid=886259" இலிருந்து மீள்விக்கப்பட்டது