பக்கம்:தயா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி 137 இந்தமானம் இருக்கே-மானமா. வானமா?-வீட்டுக்குப் பின்னால் அவரைப் பந்தல் அடியில் உட்கார்ந்து இலைகளின் சந்து வழியாப் பார்த்தால் சின்னதாயிருக்கு: இங்கே எப்படி இவ்வளவு பெரிய மைதானமாயிருக்கு? மேகங்கள் அடைச்சுண் டாலும் சிறுத்துப் போயிடறது, ஆனால் இன்னிக்கு 'ஜம்'லு தோச்சுப் பிழிஞ்சு இழுத்துப் பிடிச்சு உலர்த்தின மாதிரி இருக்கு? பளிச்சினு நீலம், பூமி விளிம்பில் தொடற இடத்தில் லேசாய் உப்பிண்டு அங்கே செந்திட்டு படர்ந்திருக்கு. அக்காவின் கன்னம் மாதிரி. அவ்வளவுதான், ஜிங்லி வாய்விட்டு உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். 'பங்குனி மாதம் பருப்புக் கலியாணம்” பத்தாந்தேதி. சொல்லித் சொல்லிக் கலியாணம் கிட்டவே வந்தாச்சு. வீட்டுக்கு வரவாளும் போறவாளும் திடீர்னு அதிகமா யிட்டா. பண்டமும் பாத்திரமும் வீட்டில் நிரம்பிய வண் ணமா இருக்கு. இடம் போதல்லே. தினம் ஒரு பச்சை நோட்டை மாத்தியாறதுன்னு அப்பாவும் பாட்டியும் ஆத்திரப்படறா. செலவில்லாமல் கலியானம் ஆகுமா?'ன்னு அம்மா கேக்கறா. 'பணம் இல்லாமல் செலவு பண்ண முடியுமா?"ன்னு அப்பா கேக்கறா, சண்டை, சமாதானம். மறுபடியும் குஸ்தி. ஆனால், யார் மண்டை உடைஞ்சால் என்ன. என் பாடு கொண்டாட்டம், சமையல்கார மாமாவை சினேகிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/143&oldid=886260" இலிருந்து மீள்விக்கப்பட்டது