பக்கம்:தயா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி #39 உடனே, அக்காளுக்கும் தம்பிக்கும், சண்டை, கைகலப்பு அடி உதை. இனி அவளை நீ தொட்டியோ...' என்று கத்திண்டே அம்மா கையில் அப்பளக் குழவியுடன் ஒடி வருகிறாள். 'வா, வா. எங்கே போயிட்டே, உன்னைப் பார்த்துக் கறேன்! இன்னி ராத்ரி இங்கேதானே சோறு?' 'ஜங்ஷனில், வெற்றினைப்பாக்கு, பீடா சாமான் விக்க றானே, அவன் மாதிரி கோமதி கழுத்தில் ஒரு கண்ணாடி ஸ்டாண்டை மாட்டி, அதில் அவளுடைய அரிதார சாமான் களை வெச்சுக் க்ொடுத்துட்டால் போதும். அன்னி முழுக்க அவளுக்குச் சோறு வேண்டாம், தண்ணி வேண்டாம்” பாட்டி கேலி பண்ணுவதற்கேற்ப அக்கா என்னவாவது மினுக்கிண்டுதான் இருப்பாள், ஆனால், மினுக்கிண்டப்புறம் அக்கா 'ஜோக்' காகத் தான் இருக்கா, அப்போ அவளைப் பார்த்தால் வண்ணான் மடி மாதிரி இருக்கு, கலைக்க மனமில்லை. ஆனால், கலைக்காமல் கட்டிக்க் முடியாதே அதும்ாதிரி புரியாத ஒரு குழப்பம், பார்க்க மகிழ்ச்சி, சோ ஒரு வேதனை, மனக்கஷ் டத்தில் முடிஞ்ச கதை, டோல், தொட்டால் நலுங்கிடுவாளோ? பூ'ன்னு ஊதினால் காற்றில் கறைஞ் சுடுவாளே? அப்புறம் அவள் ஜிங்லியைக் கூப்பிட்டாலும் சரி, 'என்'சிவப்புச் சாந்தைக் காணோமே!'ன்னு வாய்விட்டு முன கிண்டே தேடினாலும் சரி. தமக்குக் காதில் கேட்கப்போவது 'உஷ்! உஷ்'ன்னு காற்றின் அசைவு தான். 'உஷ்! உஷ்!" ஜிங்லி சட்டெனத் தன் ஒட்டம் தெறித்து நின்றான். உடல் முழுக்க 'விர்ர்ர்ர்-' "உஷ்! உஷ்!” 'குஷ் குஷ்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/145&oldid=886262" இலிருந்து மீள்விக்கப்பட்டது