பக்கம்:தயா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i40 தயா இது காற்றின் அசைவு அல்ல. காற்று கொஞ்ச நாழியா கவே விழுந்து விட்டது. யாரோ பேசறா. முழு ரகஸ்யமா வும் இல்லை, குரல் தாழ்ந்து-ஆனால், பேசறது புரியாதபடி அவ்வளவு தாழ்ந்து இல்லை. கோமதி கோமதி!' இதென்ன அக்கா பேருன்னா அடிபடறது. இது எங்கள் குஹையிலிருந்துன்னா வரது இது எப்படி யாருக்குத் தெரிஞ்சுது? சுயத்திலேயே மோதிரம் போல். நெருக்கமாய் ஒரு மரக் கூட்டத்தின் வளையத்தின் நடுவே ஒரு புல் திட்டுத்தான் அவர்களுடைய குஹை. அதன் உள்ளேயே ஒரு புதரை நடுவில் விலக்கிக் கொண்டுதாள் நுழையனும், அதை பேச வோ, விளையாட்டுகளுக்குத் திட்டம் போடவோ, பெரியவர் களின் அத்துமீறி ஏதேனும் செய்தபின் அந்த அலை ஒயும் வரை பதுங்கிக் கிடக்கவோ கிடைத்த அவர்களுடைய ரகஸ்ய பூமி-அது பூமியே அல்ல; சொர்க்கம். ஆனால் ரசஸ்யம் குலைஞ்சு போன பின் இனி எப்படி அது சொர்க்கமாயிருக்கும்? இன்னும் யாருக்கோ தெரிஞ்சு போச்சே! பாரு, கணக்கு வாத்தியார் குரலாட்டமாயிருக்கே? ஆமாம் கணக்கு வாத்தியாரேதான்? 'கோமதி, இனி என்னால் பொறுக்கவே முடியாது.: "சே இதென்னன்னா?” அக்காவும் இருக்காளா என்ன? அவன் காலடியில் ஒரு அணில் மரத்தின் மேலிருந்து விழுந்து புரண்டு அடித்துக் கொண்டு ஒடிற்று. பின்னாலேயே விரிந்த இரு பெரும் சிறகுகள்-அவற்றின் விர்ர்" முகத்தில் மேர்திற்று-துரத்திப் பாய்ந்து வந்து, பூமியில் அணில் விழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/146&oldid=886263" இலிருந்து மீள்விக்கப்பட்டது