பக்கம்:தயா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜிங்லி - 霹翡 இடத்தை ஒற்றி, ஏமாந்து: எழும்பிப் போயின. இத்த னைக்கும் இமை துடிக்கும் நேரம் கூட ஆகவில்லை. மரத்தின் வேரின் அடியிலிருந்து “ட்வீக் ட்விக்!! Lడక్ష!!!' பயமா? ஏளனமா? வெற்றியா?? "ஆமாம். என்னை நெடுந்துாரம் ஆசைகாட்டி இப் போது நடு வழியில் விட்டு விட்டாய்,' 'நீங்கள் என்ன சொல்றேள்? கால் ஆற மாலையில் உலாவக் கிளம்பினவளை, இங்கே எங்கேயோ ஒரு கல் வெட்டு காண்பிக்கிறேன் னு அழைச்சுண்டு வந்துட்டு, “நான் %2经 ريمي உங்களை நடு வழியில் விட்டுட்டேன்' என்கிறேனே "நான் இந்த வழியைச் சொல்லவில்லை. உனக்கு அன்னிக்கு நினைவிருக்கா? உனக்கு மறந்து போனாலும் நான் என் நெஞ்சில் கல்வெட்டாய்க் காப்பாற்றித்தான் வைத்திருக் கிறேன்.” 'ஒ, இதுதான் நீங்கள் காண்பிக்கப்போற கல்வெட்டா?” "ஆமாம். ஏன் கூடாது? இதைவிடக் கல்வெட்டு ஒசத்தி யாமோ?. இது கல்வெட்டு கூட இல்லை. இது நெஞ்சின் பிளவு, இது இதயத்தின் விரிசல்!” ஏதேது: கணக்கு வாத்தியார். தமிழ் வாத்தியாராகவும் இருக்கலாம் போல இருக்கே செய்யுள் பேசறாரே! நீ என்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், என் மேல் வீசிய ஒல்வொரு பார்வையையும். புரிந்த புன்னகையை யும்; என் எதிரே நடமாடுகையில் உன்ஒவ்வொரு அங்க ஆசை வையும் என் நினைவில் பொக்கிஷமாய் எப்படி சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? ஒரு சமயம், காற்றுவாக்கில், உன் முன்றானையின் தலைப்பு என் முகத்தில் மோதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/147&oldid=886264" இலிருந்து மீள்விக்கப்பட்டது