பக்கம்:தயா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தயா மூர்ச்சையிலிருந்து நான் தேற எனக்கு எத்தனை நாளாச்சு தெரியுமா?” இதுக்குத்தானே பாட்டி அடிச்சுக்கறா: "அடக்கம்! அடக்கம்: முனையைத் தூக்கி இடுப்பில் சொருகு' ன்னு. நான் ஒண்னும் உங்களுக்கு ஆசை காட்டல்லேஎல்லாம். நீங்களா நினைச்சுக்கறதுதான்.” "அப்படியேதான் இருந்துட்டுப் போகட்டும். என் னுடைய எத்தனையோ சுமைகளில் இதுவும் ஒன்று. என்னைப் போல் நீயும் நினைக்கணும்னு எதிர் பார்க்க எனக்கு உரிமை யில்லைதான். ஆனால் என் எண்ணங்கள் நான் இப்படித் தான் எண்ணனும் என்று மாற்றியமைக்க யாருக்குமே உரிமை கிடையாது. என்னால் என் எண்ணங்களை எண்ணா மலும் இருக்க முடியாது!” - 'நீங்கள் என்னென்னவோ பேசி என் மூளையைக் குழம்ப அடிக்கறேள்!”-கோமதி சிணுங்கினாள். - "உனக்கு இப்போது அப்படித்தான் இருக்கும். பின்னால் என்றேனும் ஒருநாள் நினைக்காமலா இருப்பாய். யூனிகாந்த் என்று ஒருவன் இருந்தான், அவன் என்மேல் வைத்திருந்த ஆசையில் என் காலடியிலேயே தன் உயிரைத் தியாகம் செய்யத் தயாராயிருந்தான்' என்று? தியாகம்! அப்போ இதுமாதிரியும் ஒண்ணு இருக்கா? :ஒ' அக்காவுக்கு ஆச்சரியமா? சந்தோஷமா?? பீதியா??? சந்தோஷமாய்த்தான் இருக்கும். ஏன் இருக்காது? தனக் காக ஒருவன் உயிரைவிடக் காத்திருக்கான் என்றால் அவனிடம் என்ன வேனுமானாலும் வேலை வாங்கிக்க லாமே! கிணற்றிலே சொம்பு விழுந்துட்டால் அவனை முழுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/148&oldid=886265" இலிருந்து மீள்விக்கப்பட்டது