பக்கம்:தயா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 #ustr 'போதும் போதாதற்கு மூத்தநாட்டுப் பெண் வந்து சேர்ந்ததும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஆயிடுத்து, சாதம் கூடத் தாளத்துக்குத்தான் கொதிக்கிறதுன்னா பார்த்துத் கோங்கோளேன். மன்னியும் கொழுந்தனும் ஒசையை அப்படி அலசியிருக்கா என்னடா சம்பத், அப்படித் தானே?" அவர் முகம் தழலாடிற்று. 'மாமியார் மெச்சறேன்னு நினைச்சுக்கப்படாது. மற்ற தெல்லாம் எப்படியோ, என் நாட்டுப்பெண் பாட்டு கந்தர்வ கானம்தான். ஆள் பார்வைக்கும் பங்கரையில்லை. இத்தனைக்கும் சிrையில்லை, பிறவியோடு வந்ததுன்னு தான் சொல்லணும். சும்மா சொல்லக்கூடாது.” 'வாஸ்தவம்தானே! அஞ்சு விரலும் ஒரே மாதிரியா யிருக்கா? என்று அப்பா தன் கையை அல்லாசாமி காட்டினார். கரணை கரணையாய் முடிச்சும் முறுக்கும் ஏறிய முரட்டு விரல்கள். எங்கள் விரல் பத்து பண். ணலாம், 'பிள்ளையார் ஏதோ காத்திண்டிருக்காரே, தன் அம்மா மாதிரியே தனக்கு அமையனும்னு, அது மாதிரி சம்பத் தன் மன்னிபோல் தனக்கு வாய்க்கத் தவங்கிடக்கான். என்னடா சம்பத். அப்படித்தானே? என் மனம் அதன் விளிம்பில் தத்தளிக்கின்றது. வாழ்க்கைப் படுதல், பரிகை தேறுவது இது எல்லாம் முதல் கல்லிலேயே மாங்காய் விழுந்தால்தான் மணத்தது. மன்னி: உன் பேரைச் சொல்லி என் வாழ்வு பறிபோகாமல் பார்த்துக் கொள், மன்னி உன்னை நான் பார்த்ததில்லை. மானஸ் மாய் உன் காலில் விழுகிறேன். மாமி இதயத்துள் புகுந்து அவர் மனளை மாற்று. இந்த வரன் தவறி-வரிசை வரிசையாய் என்னை நாலு பேர் வந்து பார்த்துப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/158&oldid=886276" இலிருந்து மீள்விக்கப்பட்டது