பக்கம்:தயா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி 153 அவர்கள் கண்ணெச்சிற் படாமல் என்னைக் காப்பாற்றுநான் கோரினது நடந்துண்டிருக்கா? மாமி ஏதோ பேசறாரே!- ஒண்ணிருந்தால் ஒண்னு இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி அஞ்சு விரலும் ஒரே மாதிரியாயிருக்கா?” 'லக்ஷத்தில் ஒரு வார்த்தை. அப்படியிருந்து விட்டால் உலகம் ஏது? அப்புறம் அதுவே என்னத்துக்கு?” "என் உயிர் ஊசலாடறது; நீங்கள் ரெண்டு பேரும் சிலம்பம் விளையாடிண்டிருங்கோ,’’ '-இவனுக்கும் என் மூத்த பையனுக்குமிடையே எனக்கு மூணு பெண்கள். மூணு பேரும் பாட்டுன்னா வாய்ப்பாடு ஒப்பிப்பார்கள். மூணும் கணக்கில் புலி. 16x1 = 16...” “My God!” - மாமி காதில் வாங்கிக்கொண்டாரோ? தெரியவில்லை. 'ஆனால் கலியாணம் ஆகாமல் போயிடுத்தா? மூனும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் குடியும் குடித்தனமும் நடத்திண்டுதாணிருக்கு ” "இருக்கட்டும் இருக்கட்டும், பகவான் புண்ணியத்தில் இருக்கிற இடத்தில் செளக்யமாய் இருக்கட்டும்.’’-அப்பா பக்தியுடன் கரங் கூப்பினார். "அவாவாள் இருக்கிற இடத்தில்தான் இருக்கா. மாமி என்னைப் பார்த்துக் கண்சிமிட்டினார். அடி பொண்ணே, உங்க அப்பா பயப்பட வேண்டாம்; உனக்கு நாத்தனார் பிடுங்கல் இருக்காது' என்று அதற்கு அர்த்தம். இன்றைக்கென்றே தோட்டத்து மரத்திலேயே பழுக்க விட்டுப் பறித்து, ஒவ்வொரு முத்தாய் உதிர்த்துப் பழத்தட்டில் குவித்திருந்த மாதுளை விதைகள் தங்கள் ரஸ்மிகுந்த அர்த்தத்துடன் மாமிக்கு "ஒத்தான்சாய்க்” கண் சிமிட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/159&oldid=886277" இலிருந்து மீள்விக்கப்பட்டது