பக்கம்:தயா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

ஹ-ம், நாங்கள் கிளம்பறோம். நிஜமாகவே நீங்கள் பிசான்ன மாதிரி ரயிலுக்கு நேரமாகிவிடும் போல் தானிருக்கு. ஊருக்குப் போய்த் தெரிவிக்கிறேன். எல்லாம் அந்தத் தையல்நாயகி புண்ணியத்தில் நான் நினைக்கிறபடி நேருவதா யிருந்தால், ஆனியிலேயே முகூர்த்தத்தைக் குறிச்சுடுவோம்."

அப்பா பேந்தப் பேந்த விழித்தார், 'இதுதானே ஆணி? "ஆமாம். இன்னிக்குத்தான் இரண்டோ மூணோ பதினைஞ்சு, இருவது வாக்கில்-' அப்பா அம்மாவைப் பார்த்தார். அம்மா அப்பாவைப் பார்த்தான். மாமி எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தார். 'அதுக்கில்லே-' என்று அப்பா தன் குரலை பாகு இழுத்தார். 'எதுக்கில்லை?-மாமி முகத்தில் என்ன ஆச்சரியம்! எவ்வளவு பாங்கான பாசாங்கு பேசுகின்றது? 'சில ஏற்பாடுகள் பண்ணவேண்டியிருக்கு” முனகினார். என்று அப்பா "அதென்ன ஏற்பாடுகள்? உமக்கு இங்கே கஷ்டமாயிருந் தால் பட்டணத்துக்கு வாரும். கலியானத்தை நடத்தித் தரேன். காலையில் தாம்பூலம் மாற்றி, மத்தியானம் தாலிகட்டி, மாலை வண்டி ஏறிண்டிருக்கையிலேயே அன்னி ராத்திரி மாப்பிள்ளையழைப்புக்கு இன்னொரு கோஷ்டி சத்திரத்து வாசலில் ஜட்காவிலிருந்து இறங்கிண்டேயிருக்கு, இந்த நித்ய கல்யாண வைபோகம் கண்கூடான ப்ரத்தியrம். காசை வீசியெறிஞ்சால் கான்ட்ராக்டில்ே பண்ணுவான்கள்ஒவ்வொருத்தனுக்கு இதுவே ைேழப்பு-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/160&oldid=886279" இலிருந்து மீள்விக்கப்பட்டது