பக்கம்:தயா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 தயா அழைச்சிண்டு வந்திருக்கலாமே!” "ரயில்காரனுக்குக் கொட்டியிறைக்கிறதுலே என்ன லாபம்? சுபகாரியத்துக்கு மூணு பேராய்க் கிளம்ப வேண்டாம்னுதான். ஆமா, இப்போ ரெண்டு பேராய் வந்தே ஒத்திப் போட்டாறது. சுபஸ்ய சீக்கிரம்-ஆச்சா ஆச்சான்னு நடந்துடனும்...” நாங்கள் குற்றம் செய்தவர்களாய்த் தலைகவிழ்ந்தோம். நாங்கள் 'பெஞ்சு மேல்” நின்றது கண்டு மாமி முகம் சற்று இளகிற்று. - 'சரிதான், அவள்தான் ஆசைப்பட்றாளே நான் தங்கிட்டு அவள் வரட்டும்னு விடறதுக்கும் இல்லை. ஏழு பூரா ரொம்பி யாச்சு.' - 'ஆ' வெட்கம் கெட்டு முகூர்த்தத்துக்குத் துடியா ஏன் நிக்கறேன்னு இப்போ புரிஞ்சுதா? ஆவணியில் நீங்கள் உங்கள் மீனாக கலியாணத்தை நடத்தறப்போ, அகஸ் தியர் விந்திய மலைக்குப் போயிட்டாப்போல, அவள் பிள்ளைப் பேறுக்குப் பிறந்த வீட்டுக்குப் போயிடுவாள். மனசையெல்லாம் இங்கே விட்டு விட்டு. மாதமும் அவளுக்கு அப்போத்தான்-'மாமி குரல் அதன் மேல் பட்டு விரிச்சாப் போல் தனக்குத்தானே அடங்கிப் போயிற்று. இத்தனை நாள் கழிச்சு இப்போத்தான் தரிச்சிருக்கு ஏற்கனவே சற்றே பூஞ்சை-’’ பாய் நடுவே பொம்மை யானைத் தலையில் சொருகிக் கனிந்து கொண்டிருக்கும் ஊதுவத்திப் புகையுடன் மாமி யின் சொற்கள் இழைந்து போயின. - என் கூந்தலில் பதிந்த பந்துச் சரத்தில் மல்லி மலர்ந்து மணம் கம்மென்று கூடம் முழுதும் எழுந்தது: குத்து விளக்கை விட்டில் வட்டமிட்டது. பட்டாபிஷேகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/162&oldid=886281" இலிருந்து மீள்விக்கப்பட்டது