பக்கம்:தயா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி #57 படத்திலிருந்து வnதையின் அபயகரமும் கண்களும் கருணை சொரிந்தன. மன்னி, உன் பேர் nதையோ? அப்படி நினைத்ததுமே எனக்கு நெற்றியில் வேர்வை முத்திட்டுக் குளிர்ந்தது. சமையல் அறையில் சாமான் ஏதோ உருண்டது, "ஹஅம்- தன்மேல் கவிந்த யோசனைகளைக் கலைக்கத் தலையை உதறிக்கொண்டு மாமி எழுந்தார். பெரிய சரீரம். தரையில் கையை முன்னால் ஊன்றிக் கொண்டுதான் எழ முடிகிறது, எல்லோரும் எழுந்து நிற்கிறோம். - "நம் இஷ்டத்தில் என்ன இருக்கு? இதிலேயே பாருங்கள். நான் என்னவோ நினைச்சுண்டு வந்தேன். என் யத்தனம் என்ன பண்ண முடிகிறது? காலமே இப்போ எப்படியிருக்குன்னா, அப்பப்போ அது அதுன்னு உலகத்திலே எல்லாத்துக்குமே சமாதானமடைஞ்சுபோக வேண்டியிருக்கு. டே சம்பத், எழுந்திரு. ஆவணியில் தான் கலியாணமாம், மாமி, குங்குமம் கொடுங்கோ. பெண்ணே, நமஸ்காரம் பண்றையா? சரி, பண்ணு; சமத்தாயிரு. பயப்படாதே, நான் காலத்தோடு ஒட்டிப் போற மாமியார்தான். கிறிசுகளைப் பிரிச்சு வெக்கறதில் எங்களுக்கென்ன லாபம்? எல்லாம் ஆவணி வரைக்கும் தான், பொறுத்துக்கொள்!" கள்ளிரவில். துரக்கத்தில்- (அல்ல விழிப்பா?) அரை மயக்கத்தில் திடுக்கென விழித்துக்கொண்டேன். செவியருகே, ரகஸ்யமாய் ஏதோ கீதம் ஒலித்து, நான் விழித்த தருணமே அதுவும் மறைந்தது. அது அப்படி 'திடுதிப் பென நின்றதுதானோ எனக்கு விழிப்பு வந்துவிட்டது. அதன் இன்ப அயட்டல் விண் விண் எனத்தெறித்து இதயம் நொந்தது, அறையில் சூழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/163&oldid=886282" இலிருந்து மீள்விக்கப்பட்டது