பக்கம்:தயா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 60 ##!/r ஒரு வாரம் ஆனயின் 'கலியாணத்துக்கு வேண்டிய மேல் ஏற்பாடுகளைக் கவனிக்கலாம்' என்று பிள்ளை வீட்டார் தோரணை குறையாமல், கடிதத்தில் சம்மதம் வந்த பின்தான் தெரிந்தது. மன்னி மனம் நல்ல மனம்தான். உள்ளபடி மன்னி சொல் எவ்வரை சென்றதோ அறியேன். ஆனால் என் இஷ்டப் பிரதிஷ்டையில் அவள் ஏகபோகம் செலுத்தினவளாய்த்தான் பட்டாள், ! இந்த ஆடிமூட்டம் நெஞ்சிலும் புகுந்து கவிகின்றது, இந்த மப்பு ஒன்று. மழையாவது விட்டுப் பெய்யனும். அல்லது வெய்யிலுக்காவது வழி விடனும், இரண்டும் இல்லை. கவலை விட்டவர்களுக்குத்தான் மந்தாரம் மனோ கரம். என் நிலையில் உள்ளவளுக்கு மனம் புழுங்கிப் பிட்டாய்ப் பிசையும் வேதனைதான். வர வர, இந்த அப்பா ஏன் இப்படி இருக்காரோ? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறுபது நாழியும் மோதல், ஏற்கெனவே எட்டுப் பொருத்தம். இப்போ கேட்கவே வேண்டாம். 'இந்தக் கலியாணத்துக்குன்னு நீங்கள் இந்தத் துரும்பை இந்தப் பக்கம் நகத்திைேள்னு நெஞ்சைத் தொட்டுண்டு சொல்ல முடியுமா? பெண்ணுக்கு இந்த வருஷம் குருபலன் வருமான்னு சாஸ்திரத்துக்காவது ஜோஸ்யரைச் சந்திச்சுக் கேட்டிருப்பேளா? ஒரு தடவை விரல் மடக்குங்கள்-' அப்பா "பின்னி' கறுப்பு. பெட்வீட்டில் 'ஸாலிடேர்' விளையாடிக் கொண்டிருக்கிறார். “எட்டுப் பெண்ணைப் பெற்று ஜாதகக் கட்டைத் தூக்கிண்டு, ஊர் ஊரா அலைஞ்சு, வீடுவீடா ஏறி, முட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/166&oldid=886285" இலிருந்து மீள்விக்கப்பட்டது