பக்கம்:தயா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னி - 163 இது எனக்கு ஆறுதலா அங்கலாய்ப்பா? ஈசுவரா, ஒண்ணுமே புரியல்லியே! அப்பா என்னவோ சீட்டாடிக்கொண்டு எதிர்வீட்டுத் திண்ணையில் அரட்டையடித்துக் கொண்டு, புகையிலையைப் பொடியாய் நறுக்கிக்கொண்டு, அல்லது வாசலில் இலை பொறுக்கவந்த பசுமாட்டின் கழுத்தைச் சொறிந்து கொடுத்துக்கொண்டு, கொல்லையில் பவழமல்வி பக்கத்தில் கிளைத்திருக்கும் கீரையைக் கிள்ளி அதன் நரம்பு பார்த்துக் கொண்டுதாணிருக்கிறார். - ஆனால் எப்படியோ தெரியவில்லை. திருடன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனதுபோல் சாமான்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்பாடுகள் கண்னெதிரில் வளர்வது தெரியாமலே படிப்படியாய் நடந்து கொண்டிருக்கின்றன. கட்டை வண்டியில் முட்டைகள், மூட்டை மூட்டையாய் இறங்குகின்றன. கொல்லைப்புறத்தில் கோட்டையடுப்புக் காக அகழ் எடுத்தாகிறது. தட்டான் திருட்டுத்தனமாய் வந்துபோகிறான். மாயவரம் வேணுகோபால் பிள்ளை, குழலை அக்குளில் இடுக்கிய படியே, கூழைக் கும்பிடு போட்டுத் தாம்பூலம் பெற்றுக்கொள்கிறான். பூக்காரன் அச்சாரம் வாங்கிப் போயாச்சு. பந்தலின் அடைப்பில் வாசல் திண்ணை திடீரென இருள்கின்றது. இந்த இருள் எவ்வளவு இன்பமாயிருக்கின்றது! உக்கிராண உள்ளில் வாழைப் பழ வாசனை தேங்கிப் போச்சு. சந்தனச் சேறு கூடத்தில் இப்பவே கொட்டியிறைய ஆரம்பிச்சாச்சு. பெண்களைப் போல், வாய் ஒயாமல் அரற்றாமல், காரியங்களை அவையவை வழியில் இயங்க வைத்து அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/169&oldid=886289" இலிருந்து மீள்விக்கப்பட்டது