பக்கம்:தயா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னி 165

  • வண்டிச் சப்தம் கேட்கிறது? எதிர்கொண்டு அழைக்க னுமே. சமயத்தில் மேளக்காரன் எங்கே போயிட்டான், டே வாஞ்சி, ஒடுடா வெற்றிலைத் தட்டைத் தூக்கிண்டு, சந்தனப் பேலாவை மறத்துட்டையே மணி அய்யர். என்ன இப்பத் தான் சாவகாசமாய் இலையைப் பாளம் போடறேள்?”

"ஒண்னும் கவலைப்படாதேங்கோ. அண்ணா! இது 象 நாளைக் காலைக்கு, டி.பன் பந்தி அங்கே நடந்திண்டிருக்கு." கலியான கோஷம் திடீரென அலைபுரண்டு வந்து செவி மோதுகையில், தன்னுடன் என்னை அடித்துக் கொண்டு போ கையில், என்னைப் பம்பரம் சுற்றிவிட்டாற்போல், நானே நினைவின் அரைவசத்தில்தான் இருக்கிறேன். எண்ணின எண்ணங்கள் எல்லாமே பலியாது. காத்தி ருந்த தவம் மாத்திரம் பலித்த நன்னாள் நிஜமாகவே வந்து விட்டதா? என்னைச் சுற்றி நேர்வனவெல்லாம் நிஜந்தானா? ஜலத்துள் அமிழ்ந்தவளுக்குக் கேட்கும் கரை நிகழ்ச்சிபோல். பேச்சுகள் இரைச்சலினின்று அப்பப்போ பிரிந்து வந்து அரைக் காதடைப்பில் கேட்டு, திரும்பவும் இரைச்சலிலேயே கலந்து விடுகின்றன. w இஷ்டம் இஷ்டப்படி நடந்தாலும், அப்படி நடந்து விட்டதை நம்ப முடியாமல் அதுவே ஒரு சிறு பயமாகவே இருக்கிறது, கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். என் மிாமியாரின். தேஜஸ் கண் கூசுகிறது. ஒன்று நன்கு தெரிகின்றது; அவர்கள் வீட்டில் எத்தனை பேராயினும் சரி. அத்தனை பேரும் அவரைச் சுற்றி இயங்கும் கிரஹங்கள்தான். "என்ன பெண்ணே, முழிக்கறே! வா, வா, எல்லோரும் உன்னைப் பார்க்கத்தானே வந்திருக்கோம். இன்னிக்கு எல்லோருக்கும் ஒரு நடிஸ்காரம் போட்டால் போதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/171&oldid=886292" இலிருந்து மீள்விக்கப்பட்டது