பக்கம்:தயா.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 suuff நாளைக்கு முகூர்த்தத்துக்குப் பின்தான் ஆளுக்கு ஆள் முதுகை ஒடிக்கிறது இருக்கவே இருக்கே எது கிழக்கு? புது இடம் வந்தாலே திக்குத் தப்பிப் போறது. இவர்தான் உன் மாம னார். இரு சேர்ந்து நிற்கிறோம். எங்களுக்கு ஒண்ணு தனியாப் போடு. இவள் உன் நாத்தளார்மார்கள், எல்லோரும் உனக்குப் பெரியவாள்தான்-இவர்தான் .' என்னையறியாமலே மன்னி முகம் தேடுகிறேன். சபலம் அடித்துக் கொள்கிறது, ஒரு வேளை-கடைசி நிமிஷத்திவ்ப்ளான் மாறி-மன்னியும்-1 'இதுதான் உன் மச்சினன்,' ஒற்றைநாடி தேகம் ஜியோமிதி வளைவுபோல் துளிக்கூட பிசகாது இறங்கிய நெற்றிக்கோடு தன் பாதத்தில் கிளைப் பிரிந்த அடர்ந்த புருவங்களின் கீழிருந்து என் மேல் தங்கியும் என்னைப் பாராத விழிகள். நெற்றிப் பொட்டில் அடைநரை, அந்த நிமிஷத்தின் அவசரத்தில், மனதின் பரபரப்பில் என்னைச் சூழ்ந்த இரைச்சலில் அதற்குமேல் பதிவாகவில்லை. இவர் பக்கலில் என் அரைத் தூக்கத்தில் (அல்ல விழிப்பா?) கற்பனையாய்த் தோன்றிய முகத்தைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன். இவ்விருவரில் எவர் நிஜம், எவர் கனவு? கனவுக்கும் உண்மைக்கும் வித்தியாசம் என்ன? இந்தக் கேள்விகளே ஏன்? இவைகளால் எனக்கென்ன பயன்? ஆனால் வெல்லப்பாகு போல் பிசுக்காய், நெஞ்சில் சுற்றிச் சிக்காகின்றன, எதிர்க்சாரியில் இரண்டு வீடு தாண்டி சம்பந்திகளை இறக்கியிருக்கின்றது? நேற்றைய அலுவல்கள் ஒயவே மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது, ஆச்சு, இன்னும் இரண்டு மணி நேர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/172&oldid=886293" இலிருந்து மீள்விக்கப்பட்டது