பக்கம்:தயா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தயா அவள் இப்போது வேண்டியதெல்லாம், இமை கொட்டினால் போதும், தன்னை மறந்த நித்திரையில் ஒரு திமிடமேனும் தன்னை மறந்தால் அதுவே சுகம். பஞ்சணையில் தூக்கமில்லை. தூக்கமேதான் பஞ்சணை; மல்லிகைக் குவியலில் புதைவது போன்ற நித்திரையில் ஆழத்தில் அழுந்தும் இன்பக் குளுமை, வெள்ளை விழி மேட்டில் ஊசியால் கிறுக்கினாற் போன்று கிளைபிரிந்து தெறிக்கும் செந்நரம்புக் கொடிகள் தம் எரி குளிர்ந்து படிப்படியாய் அடங்கும் இரவு...... துரக்கம்தான் சுவர்க்கம், அரை மயக்கத்தில் விழிகள் செருகின. வெயிலின் வெண்மையில் நேரமே உருகிக் கொண் டிருந்தது. குடித்தனக்காரக் குழந்தைகள் மாடியில் ஒடியாடும் 'திடும் திடும்”, அவள் கத்தக் கத்த, அதுகள் கீழே வந்து, பென்சிலிலும், கரிக் கட்டியிலும் சுவரில் கிறுக்கியிருக்கும் கோடுகள். சுவரில் படபடக்கும் வீட் காலண்டரில் தேதிகள். சமையலறையில் பூனை ஏதோ பண்டத்தை உருட்டும் ஒலி, கொல்லை ரேழியிலிருந்து கிளம்பி விட்ட மாமியாரின் குறட்டை. . கிணற்றடியில் பிடிசுவர் மேல், தொட்டி ஜலம் காட்டும் நிழலாட்டம். - கொலுப் பெட்டியடியில் எலிகள் "கீச் கீச்" சத்தம். கொடியில் புடவை. உடலுக்கு நேர் காற்றில் மிதக்கும் மின்சார விளக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/178&oldid=886299" இலிருந்து மீள்விக்கப்பட்டது