பக்கம்:தயா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##4 ####"ร Go, என்னகோரமான கனவு! அல்லது நினைவா? உள் பலத்தை வருவித்துக்கொண்டு சோம்பலை உதறி, வெடுக் கென்று எழுந்து, சுறுசுறுப்பாய் அலமாரிச் சாமான்களைத் தட்டிக் கொட்டி அடுக்க ஆரம்பித்தாள். வெறும் நினைவேதானானாலும் அதன் அதிர்ச்சி வயிறு நொந்தது. அதிலேயே நினைப்பை ஒடாது தடுக்கக் காரியத் தில் முழு மனத்துடன் முனைந்து விட்டாள். சே, என்ன மனுஷனோ, கலைப்பதேதான் கருத்தாய் அது என்ன வீம்போ? இவர் கூடிவர செட்டைத்தான் அதன் இடத்தில் வைத்திருக்கிறேனே, என் குங்குமம், சாந்து, பவுடர், சீப்பு, கண்ணாடி மூலையில் இவருக்கு என்ன வேலை? எல்லாத்தையும் தலைகுப்புறத் தள்ளி, கீழே சிந்தி, மசியைக் கொட்டி-இந்த அக்கிரமம் எங்கே அடுக்கும்? கேட்டால் அதற்குத் தனியா ஒரு கோணல் சிரிப்பு, 'அதான் அடுக்காகரி, நீ இருக்கியே!” என்று ஒரு கிண்டல். அம்மாவும் பிள்ளையும் தங்களுக்குள்ளே ஆயிரம் பரிமாறிக் கொள்கிறார்கள், அடுக்கினதைக் கலைக்காமல் ஒழுங்காய் வைக்கக்கூடாதா? வேஷ்டி விளிம்பைச் சேற்றில் தோய்த்துக்கொண்டு வராமல் இருக்கக் கூடாதா?’ என்று பிள்ளையை நான் ஒரு வார்த்தை கேட்டு விடக்கூடாதாம். தூணில் கயிற்றை அணைந்து, அதில் மத்தை மாட்டித் தயிரைக் கடைந்துகொண்டே பொருமுகிறார். "ஆமாம், அவன் தங்க ஊசிதான், கண்ணைக் குத்திக்கத் தான் குத்திக்கனும் போ! வா வா, இந்தச் சுத்தத்தின் நேர்த்தியெல்லாம் கையில் ஒண்னு ஏந்திண்டபின், இந்தக் கண்ணாலே, இந்தச் சதை வளர்ந்த கண்ணாலே பார்க்காமலா போகப் போறேன்! என்னை இன்னும் ரேழியில் தூக்கிப் போட்டு விடவில்லை. அதுக்குள்ளே, சந்து முனையில், பாசக் கயிறுடன் யமன் எனக்காகக் காத்துண்டும் இல்லை,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/180&oldid=886302" இலிருந்து மீள்விக்கப்பட்டது