பக்கம்:தயா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 177 எட்டு விமானங்கள் அணிவகுத்துப் பறந்தாற் போல், மறுபடியும் காதைப் பொளியும் அதே ரீங்காரம். வலியில் மலர்ந்த விழிகள், மேனோக்கி ஆகாயத்தில் விமானங்களைத் தேடின. ஆனால் அங்கு நீலம்தான் வெறிச்சிட்டுத் துலங்கிற்று, மேலும் மேலும் அந்த வெண்கல நாதம் அவள்மேல் கூடு பின்னி அவளை மூடிற்று. . * - 'அம்மா!' தொண்டையில் அலறல் உருக்கூட்ட முழு வேகத்துடன் முயன்றதுதான் அறிவாள். உடனேயே நினைவு தப்பி விட்டது. - தும்பை வெள்ளை தரித்துப் பால் ஒழுகும் சிரிப்புடன் உருவங்க்ள் வளைய வருகின்றன. அவள் கை நாடியை ஒரு நர்ஸ் பற்றுகிறாள். ஒருத்தி ஒரு பேஸினை'த் தூக்கிக் கொண்டு வருகிறாள். அதனின்று ஆவி பறக்கிறது. இன்னொருத்தி, நீலக் காகிதத்துள் சுருட்டிய பஞ்சுடன் வருகிறாள். - திடீரென ஒரு வீறல், பக்கத்தறையிலா, தான்தானா வலியின் மீறலில், தன் வலியா பிறர் வலியா, யார் வலி என்றுகூடக் கண்டுகொள்ள முடியவில்லை. இது பூமியின் வீறல், தன்னுள் நேர்ந்து கொண்டிருக்கும் பூகம்பம். இதில் நான் உயிரோடிருக்கிறேனா,செத்து விட்டேனா? செத்து விட்டால் எங்கிருக்கிறேன்! மறுபடியும் அதைத் திறந்த வாயி லிருந்து அவள் கூந்தலைப் பிடுங்கிக்கொண்டு வ்றிச்”சென்று ஒரு புதுக் குரல் கிளம்பியது, - தி-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/183&oldid=886305" இலிருந்து மீள்விக்கப்பட்டது