பக்கம்:தயா.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 179 அவன் முகத்தில் இலேசாய் அருவருப்பின் ரேகை நெளிந்தது. புழு புழு இது வரும் என்று நினைத்தேனா? வரணும் என்று வேண்டினேனா? அவன் கண்கள் இகைப்பில் சலித்தன. "நான் தொடும் வேளை வர இன்னும் நாள் இருக்கிறது. என்ன, இதற்கு வாய் இப்பவே உன்னைவிடப் பெரிதாகக் கிழியும் போலிருக்கிறதே...!” "ஏன் உங்களுக்கு வாய் சின்னதோ? அந்தக் குடமிளகாய் மூக்கைப் பாருங்களேன். எல்லாம் உங்கள் அச்சுத்தான்!” பின்னென்ன உன் மாதிரி ஜடாயுவாய் இருக்கனுமா?" என் மூக்குக்கென்ன? தன் மூக்கை 9అ 8-ബ இழுத்துப் பார்த்துக் கொண்டான். "மூக்குக்கு என்னைக் கொண்டிருந்தால் எல்லாம் நன்றாய்த்தான் இருக்கும்!” அப்போ இப்போ நன்றாயில்லையா?” அவன் முகம் விழுந்தது. தொடப் பிடிக்கவில்லை; ஆனால் தன் மூக்கை அவள் செய்யும் கேலி குழந்தையையும் தாக்குவது பொறுக்க வில்லை, அவன் நெஞ்சு நசிவலைக் கண்டு கொண்டுதானோ என்னவோ அவள் புன்னகை புரிந்தாள். . . .

  1. ,

காக்கைக்கும்...... காக்கை யார்? எப்படியும் நிறம் உன்னைவிட நான் ஒரு மாற்று கூடத்தான்.” 'இருந்துக்கோங்களேன்! அதுவும் என் பெருமைதான். எப்படியிருந்தால் என்ன? கறுப்போ, சிவப்போ நம்முடையது நமக்கென்று ஒண்ணு...” எனப் பெருமூச்செறிந்தாள். அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் ரத்தம் குபுகுபுத்து முகம் செந்தழலாகியது. அவள் கையை அவன் கை பற்றியது, மூச்சுத் திணறிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/185&oldid=886307" இலிருந்து மீள்விக்கப்பட்டது