பக்கம்:தயா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 g&ilit? இன்றைக்கென்று விடிவிளக்கு வேறு மக்கர்’ பண்ணிற்று. நாணின் அதிர்வுடன் அது உள் நுழைந்ததும் விளக்கு குப்பென்று அணைந்து போயிற்று. கும்மிருள். ரீங்காரம் வெள்ளமாய்ப் பெருகி இருளை நிறைத்தது. குழந்தை மேல் பலமாய்த் துணியைச் சுற்றி இறுக அணைத்தபடி இருளில் ஒசைச் சுழல் வழியே முகம் திரும்பித் திரும்பி. தான் இழைத்த பழிக்கு என்ன நேரப் போவது என்று அறியாமல், என்ன நேரிடினும் குழந்தையை விட்டுத் தனக்கு என்ன நேரிடினும் நேர்வதற்குக் காத்திருந்தாள். எது நேரிடினும் அது சம்மதமே, நியாயமுமே, அவள், இழைத்த பழியே உருவாய்ப் பிதுங்கி, முகம் கூறிட்டு அவளைத் தேடுகிறது. இருளில் கண்கள் தொடர முடியுமா அந்த ஒசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை, செவி எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது: தம்பூரை மீட்டினாற்போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில். தன் தன்மையே துவங்கித் தனிப் பரவச மடைந்தாள். தானும் அத்துடன், அதன் தேட லோடிழைந்தாள், கோபங்கள். கோபங்களின் அடிவாரமாம் பயம். பயத்தைமறைக்கத் தைரியம், தைரியத்துக்கு அலங்காரமாய்ச் சிரிப்பு, பீதிகள், பொய்மைகள், சுத்தங்கள், அசுத்தங்கள் அருவருப்புகள் யாவும் தடம் தடமாய்ப் பட்டையுரிந்து, சுற்றி உதிர்ந்த சருகுகளின் நடுவே ஒன்று-ஒருணர்வுதான் நெருப்புத் துண்டாய்த் தனித்து நின்று சூழ்ந்த இருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/190&oldid=886313" இலிருந்து மீள்விக்கப்பட்டது