பக்கம்:தயா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ॐ:५ to- z « 劲 --- ు క్షి స్థ , । 'இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்: "ஆமாம். இதுவும் பொருள் காண்பதின் ஒரு விதம்.' "ஒ; நீ சொல்றையே, நம்பிக்கையின் நிஜ உரு இதுதானா?” இல்லை என்பதற்கு உண்டோ?” "இருந்தாலும் தயா, ஒரு நாளா இரு நாளா? நாளைக்கு, நாளைக்குன்னு ஒண்ணா, ரெண்டா? எட்டு வருஷம் ஒரொரு சமயம், ஒரு ஒரு நிமிஷமும் கழுத்தின் மேல் இரும்புக் குண்டாய் இறுத்தறது எனக்குத் தெரி யாதா?” "நாளை, நாளை இருக்கும் வரை காலத்துக்குக் கணக்கேது? நாம் போன பின்னும், இன்று போயும் நாளை' உண்டு. உசிரே அதுதானே! நம் தோல்வியும், துக்கமும் அழியுமா?” - 'நீ என்ன தான் சொல்லு: இனிமேல் உன் புருஷன் திரும்பி வந்தால் அதிசயம்தான் ஒண்ணு இன்னிக்குச் சாமியாரோடு ராவோடு ராவா ஒடிப் போனானே. அப்படியே அவனும் காஷாயம் வாங்கிண்டிருக்கணும்; இல்லாட்டா சொல்ல வாய் கூசறது-" 'சம்பந்தம் பிரஸ்தாபமாகும் போதே எங்காத்துலே சொன்னா. அவாளை என் மாமனாருக்குத் தெரியும். பையன் ஒரு தினுலா எதிலேயுமே பற்றில்லாமல் ஒத்த ரோடும் பேசாமல் மணிக் கணக்கில் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஞானம் மாதிரி ஒரு தினுசாப் இருப்பான்னு சொன்னார், ஆனால் அப்பாதான் பிடிவாதமா, பையன் தேஜஸ்ஸாயிருக்கான், ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கிறது, தங்ாவுக்கு ஜாதகத்திலே இரண்டு பிள்ளையும் ஒரு பெண்ணும் இருக்கிறதுன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/20&oldid=886317" இலிருந்து மீள்விக்கப்பட்டது