பக்கம்:தயா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபா முனைஞ்சு நின்னுட்டார். யார் தலையெழுத்தை யார் மாத்தறது? எழுதினவனாலேயே முடியாதே' அதே சமயத்தில் மணவறையில் லம்பத் தன் மனைவி யிடம் சொல்லிக் கொண்டிருந்தான் : 'தயா தூய்மையானவள். வாழ்க்கை இன்னதென்று அறியுமுன்னால் சாந்திக்கு முன்னாலேயே அவள் கணவன் காணாமல் டோப் விட்டான். தயா ரொம்பவும் பட்டவள். அவளை நாங்கள் எங்கள் உள்ளங்கையில் ஏந்திக் கொண்டிருக் கிறோம். அவள் மனம் நோக நீயும் காணக் கூடாது--’ - இதெல்லாம் அந்தக் காலம்......' -தெருவில் யாரோ உரக்கப் பாடிக் கொண்டே போனான். உள்ளே ஸ்ம்பத் இரைந்து கொண்டிருந்தான். 'அந்த நாளில் அம்மா பற்றுக் கைக்கு ஜலம் கேட்டால் காதில் விழாத மாதிரி போய்க் கொண்டேயிருப்பேன் இப்போ என்னடா என்றால் கைக் குழந்தைக்குத் தலை துவட்டிக் கொண்டிருக்கிறேன், அம்மா போய்ச் சேர்ந்தாளோ அவள் இடிச் சொல் தப்பித்தேன். வீட்டில் இரண்டு பொம்மனாட்டிகள் இருக்கிறீர்கள். இந்த மூணு பசங்களை மேய்க்க வக்கில்லை. ஒவ்வொருத்திக்கும் வீட்டு ஆண் பிள்ளையைவிட ஜோவி தலைக்கு மேல், நிற்கிறது தயா ஏ தயா, தயா? எங்கேயாவது பரோபகாரம் பண்ணப் Giurrusti : s-rrattr?” - அடுக்குள்ளிருந்து ஜானகியின் குரல் எட்டிற்று. 'அக்காவுக்கும் எனக்கும் நீங்கள் வெளியில் போயி ருந்தப்போ தர்க்கம்.” உங்களுக்கு வேறென்ன வேலை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/21&oldid=886318" இலிருந்து மீள்விக்கப்பட்டது