பக்கம்:தயா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; ទ្វ #7 அவள் செவி வாங்கியதோ இல்லையோ, தனக்குத் தானே பொருமிக் கொண்டிருந்தாள். 'படியேறி மரமாத் தழைஞ்சு அட்சதை போடுங்கோ' என்று கேட்கிறாள். போ போ! உன் மாதிரி எத்தனையோ பேர், இதே வேலையாப் போச்சு மன்னிக்கு ஏதோ குழந்தைப் பிடுங்கல், வேலையலுப்பு என்றே வைச்சுக்கறேன், வந்தவளும் அப்படித்தான் கொண்டாளோ என்னவோ, சாந்தமா, அப்படிச் சொல்ல ஆகாது குழந்தை. நான் அயலானவள், சுமங்கலி, வெள்ளிக் கிழமை வந்திருக்கிறேன். நான் பிச்சையெடுக்கிறவள் இல்லை. வேண்டுதலையில் மடியேந்தறேன். இல்லை என்காதே’ன்னு புத்தி மாதிரி, இன்னொரு சான்ஸ் கொடுக்கற மாதிரி சொல்றாள். இது மாதிரி வேஷம் போடறவானையும் எத்தனையோ பேர் பார்த்திருக்கிறேன்' என்றால் என்ன அர்த்தம்? ஆர்சிகை எடுத்துண்டு நான் வந்திண்டே இருக்கேன்; அதற்குள் அந்தப் பாட்டி ஒண்ணுமே பேசல்லை. குறுஞ்சிரிப்பு சிரிச்சுண்டு விருக்குனு போயிட்டா, ஏந்திய கையோடு துரத்திண்டே போய்த் தெரு முனை வரைக்கும் தேடினேன். ஆனால் மின்னலா மறைஞ்சுட்டா, ஒரு நிமிஷம் திக் பிரமை பிடிச்ச என் நினைப்பே எனக்கில்லை. நினைவு திரும்பினதும் பார்த்தால் கையில் அரிசி காணோம். ஆனால் தலைப்பு இனத்தது. என்னையுமறியாமல் மடியில் கட்டிண்டிருக்கேன். அப்படி நடுத் தெருவில் மடிப்பிச்சையோடு தனியா நான் நிக்கிறதைத் திடீர்னு நானே உணர்ந்ததும் அடி வயிற்றில் நெருப்பு லெச்ச மாதிரி சுறில்னுது. அதிலிருந்து தான் தேறப் பார்க்கிறேன். ஆனால் தேறுதல் வரவில்லை அண்ணா: இதுவரை தெரியவில்லை. ஆனால் இன்னிக்குத்தான் பயமா யிருக்கு. என் நம்பிக்கை ஆட்டம் கொடுத்துப் போச்சோ? நான் இது வரை நினைச்சிருந்த மாதிரி தாளை என்பது கிடையாதோ? இன்று தான் உண்டோ?” இ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/23&oldid=886320" இலிருந்து மீள்விக்கப்பட்டது