பக்கம்:தயா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 &## குரல் இழுத்த திரி மாதிரி சிந்தனையில் மங்கிற்று. "அவளே வந்தாளா? இல்லை. வந்து காண்பிக்க வந்தவளா? தும்பையா நரைச்ச கூந்தல் மஞ்சள் கூடப் பூத்து விட்டது. மங்கலம் யாருக்கும் பிறவியோடு பிறந்தது, வேஷம் போடுவதும் போட்டுக்கறதும் நாம்ாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி. வேஷம் வேஷம் என்று கொண்டே ஒரு நாள் வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை, வேறு ஏதாவதா? எது நிஜம்?” சம்பத் அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டான். நேரமாகி விட்டதே. ஜானகி தட்டுப் போட்டு விட்டாளா, இல்லையா. தெரியவில்லையே? 兹 烹 : ம்ேபத் சாப்பாட்டின் முடிவை நெருங்கிக்கொண்டிருந் தான், எதிரே தயா தன் இலையில் சாதத்தை வைத்துப் பரிமாறிக் கொண்டு, தான் சாப்பிட ஆயத்தமாகிக் கொண்டி ருந்தாள். ஜானகி அடுக்குள்ளில் ஒழித்துக் கொண்டி ருந்தாள். மோருஞ் சாதத்தைக் கப்பிக்கொண்டே லம்பத், என்ன தயா இன்னிக்கு இலை மரியாதை' 'என்னலோ இன்னிக்கு உனக்கு டியன் பொட்டலம் கட்டிக் கொடுத்ததில் மிஞ்சினதை வீணாக்க மனமில்லை.” "ஆனாலுல் கையகலம்தானே இருக்கிறது?’’ "சரியாப் போச்சு இதை வைச்சுண்டு அசுவமேத யாகம் பண்ணலாம்!" "ஜானகி. இன்னும் கொஞ்சம் சாதம் போடேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/24&oldid=886321" இலிருந்து மீள்விக்கப்பட்டது