பக்கம்:தயா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயா #3 உள்ளிருந்து மொன மொணப்பும், சிப்பல் தட்டும் வெண்கலப் பானையும் இடித்துக் கொள்ளும் சப்தங்களும் வந்தன. 'என்ன ஜலதரங்கம் அடிக்கிறாய்?" "ஆமாம்! பின்னே என்ன? வடியலிலேயே கொஞ்சம் குறைஞ்சு போச்சு, ராவேளை ஒரு கவளம் குறைஞ்சால் தான் என்னன்னு நான் அசுவாரஸ்யமா இருந்துட்டேன்னா இன்னிக்கின்னு உங்களுக்கு மோருஞ் சாதத்திலே சந்தேகம் வரது.” 'சரி சரி, வேண்டாம். ஆனால் ஜானகி நீ ஆனாலும் இவ்வளவு சுட்டிச் சமத்தாய் இருக்க வேண்டாம். இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அரை' என்றால் உரை உரை" என்றால் 'கானோம்’ என்கிறாய்-' 'அன்ன பிச்சை' ஸ்ம்பத்துக்கு வந்த சிரிப்பில் பசியெரிச்சலும் கலந்து குரல் கடுத்தது. போ’ப்பா போ! சாப்பாடு ஆகிவிட்டது!" "இரு இரு. வந்துாட்டேன்.” தன் இலையிலிருந்து சாதத்தை அள்ளிக்கொண்டு தயா வாசற் பக்கம் ஓடினாள். - 'தயா தயா' அவனுக்கும் புரியாமல் லம்பத்துக்குச் சீற்றம் மூண்டது. கலத்திலிருந்து எழுந்து கைகூட அலம்பாது வேகமாய்ப் பின்னாலேயே சென்றான். ஆனால் அதற்குள் தயா போய்த் திரும்பி ரேழி வாசற்படியில் எதிர்ப்பட்டு விட்டாள். ஒட இடமின்றி எதிர்ப்பில் திரும்பிவிட்ட வேட்டைபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/25&oldid=886322" இலிருந்து மீள்விக்கப்பட்டது