பக்கம்:தயா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த அலங்கோலத்தின்

வருக்கும் சிசிப்பு ஒருங்கே வந்தது. தன்மேல் சரிந்திருந்த தம்பூரை அவளிடம் கொடுத்தான். 'ஏது மறுபடியும் இ.பத்திரவம் ஆரம்பித்துவிட்டது போலிருக்கே!” ஏனோ தெரியவில்லை. வீட்டில் எலிகள் சதா குடைந்தபடிதான். அவர்களுக்கு நினைவு தெரிந்தது. முதல் அவை அடியோடு ஒழிந்த ஞாபகமேயில்லை. ஒரு பத்து நாள் சப்தமிருக்காது; மறுபடியும் ரகளைதான். பொறி வைத்துப் பார்த்தாயிற்று; பூனை வளர்த்துப் பார்த்தாயிற்று, எலிப் பாஷாணம் ஜன்னலில் எப்பவும் உப்பாவில் இருந்தபடியிருக்கும். வருஷத்திற்கு இரு முறை வீட்டைச் சுண்ணாம்படித்து சந்துபொந்தெல்லாம் அடைத்தாகும், ஆனால் எப்படியோ மறுபடியும் வளை வைத்தாய்விடும், "இந்த இடத்தைவிட்டால், இந்த வீட்டில் எனக்கு wo வேறிடம் இல்லையா?” 'எனக்கு இங்கேதான் பாடவ றது?’’ 'இப்போ என்னைப் பாடறதாகச் சொன்னையே அது மாதிரியா?" அவள் முகத்தில் அடிக்கடி விளையாடும் முறுவல்மேல் அவனுக்கு எரிச்சலாய் வந்தது, அவள் பதில் பேசாது தம்பூராக் கட்டையைத் தன் தோள்மேல் செளகரியம் பண்ணிக் கொண்டாள். "நீ இன்னும் சொல்லவில்லையே, எப்படி என்று'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/30&oldid=886328" இலிருந்து மீள்விக்கப்பட்டது