பக்கம்:தயா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தியா அவன் பேச்சை அவள் கவனிக்கவில்லை. "இதுவாயிருக்குமா? அவளாகவே பெட்டிக்குள் கையைவிட்டு ஒரு புட்டியை எடுத்தாள் சட்டென அவள் கையிலிருந்து அதைப் பிடுங் கினான். சேரி, சரி, வேறே வினையே வேண்டாம்! இரண்டு சொட்டு போதும், ஆளைக் குளோஸ் பண்ன!” "யாரை? அவளுக்கு முழுக்கப் புரியவில்லை. 'என்னைத்தான்னு வெச்சுக்கோயேன்!’ அதை எடுத்த இடத்தில் மறுபடியும் வைத்தான், அவள் கிளுக் கென்று சிரித்துவிட்டாள். 'ஒஹோ? இது தமாஷாக்கும் சிரிக்கனுமா?" 'அதான் சிரித்துவிட்டாயே!” மறுபடியும் சிரித்துக்கொண்டே அவன் முழங்கை யைச் செல்லமாய்த் தொட்டாள். 'என்னை அடிக்கடி தொட்டுக் கொள்ளாமல் உன் னால் இருக்கமுடியாதோ? நான் என்ன ஊறுகாயா?” அவள் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள் 'இதென்ன பொம்மனாட்டிக்கு மேலே லஜ்ஜைப் படறேளே! இல்லாட்டா என்னை வெக்கம் கெட்டவள் என்கிறேளா?” "அப்படியி.ல்.லே’ என்று இழுத்தான். 'பின்னே எப்படியாம்? "ஆம், பின் எப்படி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/32&oldid=886330" இலிருந்து மீள்விக்கப்பட்டது