பக்கம்:தயா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌器 தயா அன்டிவிட்டாள், பின்னர் ஒருநாள் அவளும் அவன் கணவன் போன வழி போய்விட்டாள். . ஆகையால். அந்த நாள் முதல்கொண்டு தன்னை ாடுத்து வளர்த்து ஆளாக்கிய மாமன், தன் ஆந்திப் படுக்கையில், அண்டக்கொடுத்த தலையணைகளுக்கிடை யில் சாய்ந்துகொண்டு, தன் பெண்ணை அவன் கையில் பிடித்துக்கொடுத்து, மேல் மூச்சு வாங்க, "எனக்கு அப் புறம் நீதாண்ட இவளுக்கு கதி. இவளுக்கு நீயும் 釜。 துணையில்லாட்டா இவள் கதி நிர்க்கதி" என்று சொல்லுகையில் மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா, என்ன? மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா, என்ன? மாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா எனன? மாட்டேன் என்று சொல்லிவி. முடியுமா என்ன? அவள் கீழிருந்து அடுக்கும் அகாரங்கள் எழுப்பிய சுருள், படிக்கட்டின் வழி கீழிறங்கி, மன அடிவாரத் தில் புதைந்து கிடக்கும் இருள் கிடங்குகளில் வழி தப்பி அலைகையில், எதிரொவிகள் தாம் எழும்பி அவனை வளைத்தன. முடியுமா என்ன? ஒரு நாள் கேள்வியா, இரண்டு நாள் கேள்வியா இது? முடியுமா என்ன? அன்று இவள் எப்படி இருந்தாளோ அப்படியே 3 ് இப்பொழுதும் அவன் முன் எழுகிறாள், வெட்கம் இன்ன வென்று அறியாதவள். உள்ளுவகை முகத்தில் திறைத் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அவள் தகப்பனார் அவன் கையில் சேர்த்து வைத்த கையால் அவனை இறுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/34&oldid=886332" இலிருந்து மீள்விக்கப்பட்டது