பக்கம்:தயா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி 2% பற்றிக்கொண்டு நிற்கிறாள். அரக்குப் புடைவை உடுத்துக் கொண்டிருக்கிறாள். அட, நம்ம சாருக் குட்டியா இப்படி ஆகியிருக்கிறாள்? பசும் புற்றரையில் பணித்துளிகள் புல் நுனிகளில் நின்றன. மேல் நீலத்தில் பொன் வில் முளைத்திருந்தது. ஜல ஜரிகை புல் மேட்டிலும் தாழ்விலும் ஏறி இறங்கிக் கொசுவி மிளிர்ந்தது. இந்தச் சாரு, சாருக் குட்டியாயிருக்கையில் இவளை முதுகில் புளி மூட்டை தாக்கிக் கொண்டு லொங்கு லொங்கேன அவள் குலுங்க, தான் குலுங்க, அவள் சிரிக்க, நான் சிசிக்க இந்த மேட்டிலும் இதன் சரிவுகளிலும் எத்தனை

*

தடவை ஒடியிருக்கிறேன்! "டேய் டேப் போறும் போறும் எனக்குச் சிரிக்க முடியல்லே! வயத்தை வலிக்கிறதே! போது-மே!" "ஊஹஅம்!” அந்தச் சாருவா இது? ஸ்ருதி தாரையின் மழைச் சாரலில் புற்றரைகள் கரைந்து வழிந்து அழிந்தன. பச்சைச் சாறு வெள்ளம் கணுக்காலள வுக்குக் கிளு கிளுத்துக்கொண்டு ஓடிற்று. ஓசை மழையின் மங்கிய இருள் சுற்றிப் படர்ந்தது. இருளிலிருந்து தென்னித் திரிகள் பிரித்து அவன் மேல் நேப்து கோள்ளத் தொடங்கின. ஆம்பியின் இறக்கையின் ந:த்துடன் சன்னமான சல்ல்ாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன. பல வர்ணப் பட்டுத் திரைகள் அவைெதிரே பிரிந்து அகன்று, அவன் உள் வந்ததும் பின்னால் கம்பீரமான உயரங்களினின்று, கள்ளிச் சொட்டின் கனத்துடன், மடி மடியாய்த் துவண்டு விழுந்து கூடிக் கொண்டன. பாதங்களினடியில் பூமி சிறு சிறு பீங்கான் சக்கிரங்களின் வேல் மேடை போல், மெதுவாய், சாவகாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/35&oldid=886333" இலிருந்து மீள்விக்கப்பட்டது