பக்கம்:தயா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 31 மண்ணுமாய்க் கோபக் கண்ணின் சிவப்புடன், புரண்டு வந்து கொண்டிருக்கும் புது வெள்ளத்தின் 'ஜோ-ஒ! ஒ:” .iன்! டாண்!!' கூடத்துக் கடியாரத்து மணியோசை யுடன் நினைவு அலறிப் புடைத்துக் கொண்டு திரும்பிற்று. தான் இன்னும் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டி ருப்பதைக் கண்டான். இதுவரை கண்டதெல்லாம் பின் என்ன, கனவில்லையா? இவ்வளவு தோற்றங்களும் விழித்துக் கொண்டிருக்கையிலேயே நேர்ந்திருக்கின்றனவா? புரியவில்லை. மணி இரண்டு என்பது ஒன்றுதான் புரிந்தது. அவள் இன்னமும் பாடிக்கொண்டிருந் தாள். புரியாததொரு சீற்றம் அவனுள் எழுந்தது. திடு திடுவெனக் கீழேயிறங்கிச் சென்றான். மாடியின் அடிவாரத்தின் திருப்பத்தில் மாட்டியிருக்கும் மாமன் படத்திலிருந்து விசனம் நிறைந்த அவர் பார்வை அவனைக் குற்றம் சாட்டிற்று. - ஒருக்களித்திருந்த கதவைத் தடாலென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான். 'ஏன் இன்னம் தேரமாகவில்லையா?” என்றான் எரிச்சலுடன். அவளுடைய கற்பனையின் ஒட்டத்தில் அவன் குறுக்கிட்டமையால்: அவளுக்கு முகம் சுளித்தது. பெரு மூச்செறிந்துகொண்டு, தம்பூராவை மடி மேல் கிடத்தினாள். 'எனக்கு எல்லா நேரமும் ஒண்னுதானே' என்று முணு முணுத்துக் கொண்டாள். 'இருந்தாலும் நாங்கள் மனுஷ ஜன்மந்தானே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/37&oldid=886335" இலிருந்து மீள்விக்கப்பட்டது