பக்கம்:தயா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி - - 33 'ஆனால் நான் எப்படி பார்க்கறேன்னு உங்களுக்கு எப்படிச் சொல்றது? புரியாததைப் புரிஞ்சதை வெச்சிண்டு சொல்லலாம். காணாததைக் கண்டதை வெச்சிண்டு சொல்லலாம். ஆனால் நீங்கள் காண்றதை நான் காணல்லே. ஆனால் நான் இப்போ காண்றதை நீங்கள் காணறத்துக் கில்லை. அப்போ நான் எப்படிச் சொல்றது? காரிய சிரமத்தாலேயே அவளுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. கலகலப்பற்ற தோல்விச் சிரிப்பு, 'இருந்தாலும் சொல்லாமலிருக்க முடியல்லே. நான் சொல்லித்தான் ஆகணும். சொல்றேன்-" என்று மறுபடியும் ஆரம்பித்தாள். திடீரெனப் பேரிரைச்சலுடன் அவள் விரல்களடியினின்று சுருதி கிளம்பிப் பொழிந்தது. அதன் 'திடீர் அவனைத் துக்கி வாரிப்போட்டது. "நான் பாடறேன்னு வைச்சுக்கோங்கோ. பாடறேனா? பாடிண்டேயிருக்கேன். பாடப் பாட என் குரல் சுருதியோடே இழைஞ்சு இழைஞ்சு அப்பறம் அது சுருதி யிலேயே கலந்து ட்றது. எனக்கு, அப்பநம் என் குரல் கூட கேக்கல்லே. அது அதுவே மறைஞ்சூடறது, நேரம் இடம் எல்லாமே மறைஞ்சு, இந்தச் சுருதி ஒண்ணுதான் நிக்கறது. அதுவே ஒரு ராஜபாட்டை மாதிரி போறது, போயிண்டே யிருக்கு போகப் போகக் குறுகிக் குறுகி ஊசிக் காதளவுக்குக் குறுகி, அப்பறம் அந்தக் காதுக்குள்ளே நான் புகுந்து-றேன். நான் அதுள்ளே நுழைஞ்சப்பறம் நான் கூட இல்லை. இந்தச் சுருதிதான்.இது ஒண்ணுதான் தனியே நிக்கறது-இது ஒன்இ. தான்-” அவன் தம்பூரின் மீட்டலையே உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனறியாமலே அவள் விரல்கள் மீட்டிக் கொண்டிருந்தன. அவள் வார்த்தைகளே அம் மீட்டிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. தம்பூரின் த-3 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/39&oldid=886337" இலிருந்து மீள்விக்கப்பட்டது