பக்கம்:தயா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ಜ&#? குடம் கர்ப்ப ஸ்திரீயின் வயிறு போல் உயிரோடு விங்கி கூடத்துக் கடியாரத்தில் வினாடிகள் சொட்டிக் கொண் டிருந்தன, "அப்பொழுது நான் விழித்தெழுகிறேன்' என்றாள் திடீரென்று. அவன் வார்த்தைகளில் ஒரு புது இலக்கணம். குரல் தனி கம்பீரத்தைத் திடீரென அடைந்தது. கருவிழிகள் வெள்ளை விழிகளில் சுழன்றன. "என் விழிப்பு எவ்வாறு எப்பொழுது நேருகிறது என்றெல்லாம் நான் அறியேன். உலகத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் ஒருங்கே தொட்டுக் கொண்டு எழும் இவ் விழிப்பின் விதத்தையும் வேளையையும் எப்படி என்னால் விளக்க முடியும்? அதில் நான் கூடயில்லையே உணர்வைத் தவிர வேறெதுமிலை. இந்த விழிப்பில் விழிப்புக்கும் முந்தின உணர்வுதான். இந்த உணர்வுதான் என் விழிப்பு: இந்த உணர்வில், இந்த விழிப்பில், விழிப்பாகிய உணர்வில், உங்களை நான் பார்க்கிறேன். 'அதாவது உடம்பிலாது. சதையிலாமல், உருவே யிலாமல்'-இரட்டை நாயனத்தில் எதிர் சுரம் அடுக்கும் மறு நாயனம் போல், அவன் வார்த்தைகளே வசியங் கண்டனவாய், ஆவையும் அவளுடைய சுருதியினின்றே வந்தன போல் ஒலித்தன. .* "ஆமாம். ஆமா ஆமா ஆமாம்!” அவளுக்குத் தொண்டையை அடைத்தது. அவன் கையைத் தன்னிரு கைகளாலும் பற்றித் தன் மார்பில் வைத்துக் கொண்டாள். "இது என்னென்று எனக்குச் சொல்லுங்களேன்! சொல்லுவேளா?” அவனுக்கு உடல் உரோமங்கள் அனைத்தும் அத்தனை இரும்புக் கம்பிகளாய் விறைத்திருந்தன. வேர்வை நெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/40&oldid=886339" இலிருந்து மீள்விக்கப்பட்டது