பக்கம்:தயா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மூல சுருதிக்கும் முதல் சுருதி மெளன சுருதி உண்டோ? அவ்விடம் திடீரென அப்படித்தான் ஆகிவிட்டது. மைச் சொட்டென அவன் மண்டையுள் ஈயின் ங்ொய்' யுடன் ஒரு சத்தம் கிளம்பிற்று, வலுத்துக்கொண்டே வந்து ஏரோப்ளேனின் பேரிரைச்சலுடன் மண்டையுள் வட்டமிட ஆரம்பித்து விட்டது. அவளுக்குதந்திகளைச் சிண்டிக் கொண்டிருந்த விரல்கள் நின்று விட்டன. கட்டை விட்டுத் தப்பி விட்ட குருவியைச் சிறகின் நுனியைப் பிடித்து இருத்திக் கொள்வது போல் இன்னொரு கையின் விரல்கள், மார்பண்டைப்போய் அங்குத் தங்க இடம் தெரியாமல் தவித்தன, அந்த ஊமையடித் தவிப்பு பார்க்கச் சகிக்கவில்லை, "ஒண்னும் புரியல்லையே!” என்று முனகினாள். "நான் உன்னை விட்டுப் போயிடப் போறேன்’ என்றான் மறுபடியும். வார்த்தைகளின் அர்த்தம் இதய இரத்தத்தை வடித்துக் கொண்டுதான் புறப்படுகிறது. ஆயினும், அவ்வர்த்தத்தின் உருவாய் வார்த்தைகளுக்கு மாத்திரம் எப்படி இத்தனைக் கொடுரம்? ஏன் தவிர்க்க முடியாத இந்த உரு? - அவள் தன் நினைவில்லாது மருள் வந்தவள் போல் தான் பேசினாள். 'எனக்கே காரணம் தெரியல்லே, இரண்டு நாளா ஏதோ ஒரு திகில், ஸ்நானம் பண்ணும்போது, இரண்டு வேளையும் மஞ்சள்கொம்பு கைவழுக்கி ஜலதாரைக்குள் போயிடுத்து, ஆமாம் ரெண்டு வேளையும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/42&oldid=886341" இலிருந்து மீள்விக்கப்பட்டது