பக்கம்:தயா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 37 'ஏனாம்?’’ 'ஏன் என்று கேட்டால் எனக்குந்தான் தெரிய வில்லை. தெரிந்தால் எனக்கே ஒகு சமாதானம் தானே!” "நான் ஏதாவது தவறு பண்ணிட்டேனா? பச்சைக் குழந்தைபோல் அவளால் தான் அதுபோல் கேட்க முடியும் , அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை: நெஞ்சு தழுதழுத்தது, "அதெல்லாம் ஒண்னுமில்லை. சாரூ. தப்பெல்லாம் என்னுடையதுதான்.' - 'நீங்கள்தான் என்னை விட்டுப் பிரியும்படி அப்படி என்ன பண்ணிப்பிட்டேன்? . - 'நீ ஒண்ணும் செய்யவில்லை; வேளை வந்து விட்டது. அவ்வளவுதான். இப்போ நான் இது தவிர வேறென்ன சொல்ல முடியும்? எனக்குத் தெரிந்தால்தானே! தெரி யாமலே, உன்னை விட்டுப் போகத் துணிந்துவிட்டேனே. இந்தத் தப்பே போதாதா?” 'இதென்ன விளையாட்டு? புரியாத விளையாட்டு, அடி வயத்தைக் கலக்கற விளையாட்டு!’’ 'விளையாட்டில்லை. நிஜமாத்தான் எனக்குச் செலவு கொடு.” "ஏன்? ஏன்? ஏன்? மாறி மாறி அந்தக் கேள்வி அவள் வாயில் தவித்தது. மறுமடியும் ஆரம்பித்த இடத்துக்குத் தானே வரோம்!”-அவனுக்கு அசதியாயிருந்தது. “இத்தனை நாளாயில்லாமல்-,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/43&oldid=886342" இலிருந்து மீள்விக்கப்பட்டது