பக்கம்:தயா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 39 விட்டது. முழங்காலுக்கு மேல் புடைவைக் கொடுக்கை யிடுக்கிக் கொண்டு. துவைக்கும் துண்டு கையிலிருந்து சாட்டை போல் தொங்க நிற்கிறாள். முகத்தில் வேர்வை பிழிகையில் மேலுதட்டில் அரும்பு கட்டியிருப்பது நன்றாய்த் தெரிகிறது. அந் நிலையில் அவளைக் கண்டதும் மூலமூர்க்கத்தின் சுடர் குயீரென்று அவனுள் எழும்புகையில் கண்ணில் மேலிமைக்குள் மின்னல் பளி"ரிட்டு மறைந்தது. அவளும் அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்கள் மெதுவாய்த் தாழ்ந்தன. சிரிப்பு உதட்டின் ஒரு ஒரத்தில் ஆரம்பித்து, வர்ணத்தால் இழுத்த கோடுபோல் மறு நுனியில் போய் முடிந்தது : அவள் வென்னிருள்ளை விட்டு உடனே வந்து விட்டான். அந்த நிமிஷத்தைச் சமாளிக்க வெகு நேரம் சென்றது. அடுத்தாற்போல் சமையற்காரப் பாட்டியின் பெண்-எப்பொழுதாவது தன் தாய்க்கு ஒத்தாசையாய் வருவாள். அவளுக்கு இன்னமும் கலியாணமாகவில்லை. வறுமையின் சோகமும் சிந்தனையும் ஒருங்கே அவள் முகத் திலும், ஒல்லி உடலிலும், ஒடி நடையிலும், செய்கைகளிலும் பூத்து அவளைச் சொல்ல முடியாத நளினமான அழகிலிட்டி ருந்தன. அவனைப் பார்க்குந்தோறும் ஏனோ அவனுக்கு இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கும் செடியின் ஞாபகம் வரும். வாய்பேசாள். சிரியாள். அரிவாள்மணையில் கறிகாய் நறுக்குகையில் கட்டை விரலையும் சீவிக் கொண்டுவிட்டு வெட்டிலிருந்து துளிர்க்கும் ரத்தத்தை வலியால் அல்லசிந்தனையில் களித்த புருவங்களுடன் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்? பிறகு விட்டுக்கு வரும் வாடிக்கைத் தயிர்க்காரி. தலை மேல் கூடையுடன், அம்மா கொடுத்த வெற்றிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/45&oldid=886344" இலிருந்து மீள்விக்கப்பட்டது