பக்கம்:தயா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 காவையில் கிளம்பி விடவேண்டும். சூட்டோடு சூடாய் ஒத்திப் போட்டால் ஆறிப் போனதுதான், கையோடு மூட்டை முடிச்சு ஒன்னும் வேண்டாம். மாற்று வேஷ்டி அத்தியாவசியமான சில்லறை. இவை போதும் பிழைப்புக்கு அப்புறம் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு நினைத்தவிடம் நினைத்த சமயம் போல் கண்ட இடத்தில் கிடைத்ததைச் சாப்பீட்டு விட்டு, அப்படியே தெருக் குழா பிலோ கிணற்றடியிலோ குளத்திலோ கையை அலம்பிவிட்டு ஜலத்தை அள்ளிக் குடித்துவிட்டு, மடியில் கையைத் துடைத் துக் கொண்டு. மரத்தடியிலோ சத்திரத்துத் திண்ணையிலோ கட்டையை நீட்டிவிட்டு, அண்ணாந்து பார்த்துக் கொண்டு, நகத்திரங்களை எண்ணுவதைப் பற்றி எண்ணுகிறேன். குவியாகத்தானிருக்கிறது. இப்படியும்தான் அதுபவித்துப் பார்ப்போமே! தாக:ண்யத்திற்கு இத்தனை நாள் அடிமைப், பட்ட பிறகு, இம்மாதிரியும் வாழத்தான் ஆசையா யிருக்கிறது.” 'நினைத்தவிடம் நினைத்த சமயம் 'பல்லவி எடுப்பு, திஸ்ரத்ரிபுடத்தாளப் பிரமாணம், முக்கால் மாத்திரையில் எடுப்பு.’ பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர் ஒரு சாண், அதற்குள் அதற்கு எத்தனை ஒட்டு, தையல், கிழிசல் மறு படியும் மாட்டிக் கிழித்தல் இதெல்லாம்ே ஏன் எனக்கு? ஹாப்பா...!" இருட்டில் மூர்க்கமாய் அவன் மேல் இரு கைகள் விழுந்து மார்போடு மார்பழுந்த இறுகத் தழுவின. அவன் முகத்தைத் தஹித்த மூச்சில் தலை சுற்றிற்று. . என்னை விட்டுடாதேங்கோ- விட்டுடாதே- நான் அனாதை-!” x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/48&oldid=886347" இலிருந்து மீள்விக்கப்பட்டது